ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/01/29/hrAiSWIYHudCBtfAM0FV.webp)
பிரண்டை
ஆயுர்வேதத்தில் உடைந்த எலும்புகளை சரி செய்ய பிரண்டைதான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆஸ்டியோபோராசிஸ் பிரச்சினையை சரி செய்யும் மிக முக்கியமான மருந்தில் இதுவும் ஒன்றாகும். இதில் நிறைய கால்சியம் உள்ளது. மாதவிடாய் வலிக்கு பிரண்டை நல்ல மருந்தாகும். பிரண்டையை துவையலாக்கி சாப்பிடலாம். மஞ்சள், உப்பு கலந்து பவுடராக்கி அதை சாப்பிடலாம். ஜூஸாக்கி தேன் கலந்தும் குடிக்கலாம். எலும்புகள் உறுதியாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/09/MVnY319m14iFEH10ytqa.jpg)
கேழ்வரகு அல்லது ராகி
சிறுதானியங்களின் ராணி என அழைக்கப்படும் கேழ்வரகு இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதற்குக் காரணம் மற்ற தானியங்களை விட ராகியில் அதிக சத்துக்கள் உள்ளது. ராகி கால்சியத்தின் சிறந்த மூலமாகும். அதோடு கேழ்வரகில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/18/edYeNxEWLO1YlXA5BwiR.jpg)
மீன்
கடல் மீன்களை அதிகம் சாப்பிடலாம். மத்தி, சாலமன், கானான் கெளுத்தி போன்ற மீன்களை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வரலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/24/qaENMPilG1TJouC1Tpvz.jpg)
பால்
எலும்புகளுக்கு வலுப்படுட்ட பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். பால் மற்றும் அதன் தயாரிப்புகள் கால்சியத்தின் மேம்பாட்டுக்கு சிறந்த ஒன்றாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/dlRKH7Druj9HhFMEtOs7.jpg)
ஈரல்
இறைச்சியில் பெரும்பாலும் தவிர்க்கப்படும் உணவுகளில் முக்கியமான ஒன்று ஈரல் ஆகும் அதனை சமைத்தோ அல்லது சுட்டு சாப்பிட்டாலோ உடலுக்கு அவ்வளவு நல்லது. எலும்பு பலத்தையும் மேம்படுத்தும்.