கால் பாத வெடிப்பு: உங்கள் உடல் அனுப்பும் எச்சரிக்கை குறியீடு இதுதான் - டாக்டர் ஜெயரூபா

12 hours ago
ARTICLE AD BOX

கால் பாதத்தில் இருக்கும் பித்த வெடிப்புக்கும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளதாக மருத்துவர் ஜெயரூபா கூறுகார். இதுகுறித்து அவர் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் தெளிவாக விளக்கி கூறியிருக்கிறார். 

Advertisment

அடிக்கடி கால் பாதத்தில் வறட்சி, வெடிப்பு, அல்லது தோல் உரிந்து விழுவது போன்ற பிரச்சனைகள் வாரலாம். அவை சாதாரணம் என்று நினைக்கலாம் ஆனால் அது  கல்லீரல் ஆரோக்கியத்தோடு நேரடி தொடர்பு கொண்டிருக்கும். அதனால் பாதவிடிப்புக்கும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் உண்டு.

கல்லீரல் என்பது உடம்பில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பாகும். பித்த நீர் சீராக சுரக்கவில்லை என்றால், கொழுப்பு செரிமானம் பாதிக்கப்படும், இதில் வைட்டமின்  A, D, E, K குறைபாடு ஏற்படும். இதுவே தோல் வறட்சியின் முக்கிய காரணமாகும் என்கிறார் மருத்துவர். 

கல்லீரல் செயல்பாடு குறைவு அடையும் போது, இரத்த ஓட்டமும் பாதிக்கப்படும், இதுவும் கால் பாதத்தில் தோல் வறட்சி, வெடிப்பு, மற்றும் அலர்ஜிகளை உருவாக்கும். 

Advertisment
Advertisements

கல்லீரல் பாதிப்பின் மற்ற அறிகுறிகள்:

இரவு தூக்கமின்மை – அதிகம் போனால் இரவு 2 மணி வரை மட்டுமே உறங்க முடியும்.
வயிற்று பகுதி வீக்கம் – உடல் எடை அதிகரிக்காமல் வயிறு மட்டும் பெரிதாகிவிடும். அலர்ஜிகள் – பாதத்தில் அடிக்கடி தோல் உரிதல், அரிப்பு, சிவப்பு.
பதட்டம் – அதிக நேரம் ஒய்வு எடுத்தாலும் களைப்பு நீங்காது.

கல்லீரலை பாதுகாக்க தேவையான உணவுகள்:

கீழாநெல்லி – கல்லீரல் புனரமைப்பிற்கு உதவும்.
அவோக்காடோ – நச்சுச்சத்து நீக்கி, நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும்.
நட்ஸ் – ஆரோக்கியமான கொழுப்புகள் வழங்கி, பித்த நீரை சீராக்கும்.
கீரை, காய்கறிகள் – உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்களை  வழங்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

கேக், பிஸ்கட், லேட் நைட் பிரியாணி, அசைவ உணவுகள், ஆல்கஹால் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  

உடல்நலம் பாதுகாக்க எளிய வழிகள்:

தினமும் 10-15 நிமிடம் யோகா / பிராணாயாமாம்  செய்ய வேண்டியது அவசியம். 
அதேபோல இரவு 10 மணி முதல் காலை 2 மணி வரை நல்ல உறக்கம் இருக்க வேண்டும். 10 மணிக்கு மேல் விழித்து இருக்க கூடாது. அதிகமாக நீர் குடித்தல்,  மெதுவாக நடைபயிற்சி போன்ற எளிய மாற்றங்கள் கூட பெரிய பலனளிக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article