காலையில் தவெகவில்! மாலையில் திருமாவோடு சந்திப்பு! அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ் அர்ஜுனா!

2 hours ago
ARTICLE AD BOX

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச் செயலா​ளராக இருந்த ஆதவ் ஆர்ஜுனா அக்கட்​சி​யில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் ஆர்ஜுனாவுக்கு அக்கட்சியில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக ஐடி பிரிவு இணை செயலாளராக இருந்த சிடிஆர் நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்​நுட்ப துணைப் பொது செயலாளர் பதவியும், பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலை​யில், தவெகவில் முக்கிய பதவியை பெற்ற கையோடு ஆதவ் அர்ஜுனா சென்னையில் உள்ள  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆதவ் அர்ஜுனா: விசிக தலைவர் திருமாளவனிடம் வாழ்த்து பெற வந்தேன். அவர் நிறைய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெரி​யார், அம்பேத்கர் கொள்​கை​யின்படி என் பயணம் இருக்​கும். தவெக​வும் விசிக​வுக்​கும் எதிரெதிர் துருவங்கள் இல்லை. விஜய்​யும், திரு​மாவளவனும் ஒரே கொள்கை, ஒரே கருத்​துட​ன்​தான் இருக்கிறார்கள். 

கொள்ளை ரீதியானவற்றை திருமாவளவனிடம் கற்றேன். அவர்தான் ஆசான். எனக்கும்  திருமாளவனுக்கும் இடையே கொள்ளை ரீதியாக மாறுபாடு இல்லை. ஒற்றுமையாக உள்ளோம். முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பு இல்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கே பாலகிருஷ்ணன் போன்றவர்களை நிச்சயம் சந்தித்து அவர்களது வாழ்த்துக்களை பெறுவேன் என்றார்.

திரு​மாவளவன் பேட்டியளிக்கையில்: தமிழக அரசி​யலில் புதிய அணுகு​முறையை ஆதவ் அர்ஜூனா தொடங்கி வைத்​திருக்​கிறார். விசிக​வில் இருந்து வெளி​யேறி இன்னொரு கட்சி​யில் சேர்ந்து, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று செயல்​படும் சூழலில் என்னுடைய வாழ்த்​துக்கள்.  எங்கள் சந்திப்பில் அரசியல் கணக்கு இல்லை. பெரியாரின் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதாக அதவ் என்னிடம் பகிர்ந்தார் என தெரிவித்துள்ளார். 

Read Entire Article