ARTICLE AD BOX

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் பல துறைகளுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் பட்ஜெட்டை சரமாரியாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் மக்களை ஏமாற்றிய பட்ஜெட் என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 936 இடங்களில் பட்ஜெட் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஒரு இடத்தில் பட்ஜெட் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது அங்கு சேர்கள் காலியாக இருந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மட்டுமே செய்து தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் விளம்பரத்துக்காக வெறும் வெற்று அறிக்கைகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக அரசு பட்ஜெட் வெளியிடும் நிலையில் இது போன்று காலியாக இருப்பது ஒன்றும் வியப்பில்லை என்று பதிவிட்டுள்ளார்.