ARTICLE AD BOX
அழுகும் உணவுபொருட்களைப் போல, காலப்போக்கில் சோப்பு கெட்டுப்போவதில்லை இருப்பினும், அதன் செயல்திறன் குறையக் கூடும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சோப்பு எப்படி சேமித்து வைக்கப்படுகிறது மற்றும் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்து மாறுபட வாய்ப்புண்டு.
காலாவதியான சோப்புகளைப் பயன்படுத்துவது தோல் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும் என்று அழகியல் மருத்துவரும் அழகுசாதன நிபுணருமான கருணா மல்ஹோத்ரா கூறினார். காலப்போக்கில், சோப்புகள் அவற்றின் செயல்திறனை இழக்கக் கூடும், குறிப்பாக பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை இழக்கக்கூடும், மேலும் அதில் pH அளவுகளில் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று டாக்டர் மல்ஹோத்ரா கூறினார்.
உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு இது தோல் எரிச்சல், வறட்சி (அ) ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், காலாவதியான பொருட்கள் பாக்டீரியா அல்லது பூஞ்சை வளர்ச்சியைத் தூண்டக் கூடும் என்பதனால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று டாக்டர் மல்ஹோத்ரா மேலும் கூறினார்.
சோப்பு காலாவதியாகிவிட்டதை எப்படி கண்டுபிடிப்பது?
உங்கள் சோப்பு காலாவதியாகிவிட்டதா கண்டுபிடிக்க, நிறம் மங்குதல் மற்றும் வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளைப் பார்க்க வேண்டும் என்று டாக்டர் மல்ஹோத்ரா கூறினார். உங்கள் சோப்பில் பூஞ்சை அறிகுறிகள் தென்பட்டால், அதை தூக்கி எறிவது நல்லது.
தோல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க லேசான, மணம் இல்லாத சோப்புகளைப் பயன்படுத்த டாக்டர் மல்ஹோத்ரா பரிந்துரைத்தார். சோப்பை முறையாக சேமித்து வைப்பது அதன் ஆயுளை நீட்டிக்க உதவும். குறைந்த ஈரப்பதம் உள்ள இடத்தில் சோப்பை வைப்பதால், பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்கிறார் டாக்டர் மல்ஹோத்ரா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.