ARTICLE AD BOX
கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடகர் ஆங்கி ஸ்டோன் கார் விபத்தில் பலியானார்.
கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடகர் ஆங்கி ஸ்டோன் (63), சனிக்கிழமையில் சென்ட்ரல் இன்டர்காலேஜியேட் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து விளையாட்டின் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
இந்த நிலையில், மாண்ட்கோமெரி அருகே சென்றபோது, ஸ்டோனின் சொகுசு காரின் மீது மற்றொரு சரக்கு வாகனம் மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஸ்டோன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இருப்பினும், அதிர்ஷ்டவசமாக ஸ்டோனுடன் பயணித்த 7 பேரும் உயிர்தப்பியதுடன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஸ்டோனின் இழப்பு தாங்க முடியாத வடுவாக இருப்பதாக இசை ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பிரிட்டன் மன்னர், ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கிறார் ஸெலென்ஸ்கி!