கார் விபத்தில் சிக்கிய இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

3 days ago
ARTICLE AD BOX

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் கார் துர்காபூர் விரைவுச் சாலையில் கடுமையான விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தாதுபூரில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  . நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி மீது மோதாமல் இருக்க கங்குலியின் கார் ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு, நிலைமை கட்டுக்குள் வரும் வரை கங்குலி சாலையோரத்தில் சிறிது நேரம் காத்திருந்துள்ளார்.  சிறிது நேரத்திற்குப் பிறகு சென்றுள்ளார். இந்த விபத்தில் சவுரவ் கங்குலிக்கு காயம் ஏற்படவில்லை என்றும், அவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Entire Article