கார் மீது ஆட்டோ மோதி விபத்து… நடுரோட்டில் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த ராகுல் டிராவிட்.!

3 hours ago
ARTICLE AD BOX
Rahul Dravid auto drier

கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள்  கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு – சாலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கார் மீது லோடுஆட்டோ லேசாக உரசியது. இதையடுத்து, ராகுல் டிராவிட் சிறிது நேரம் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து புறப்பட்டார்.

பெங்களூரில் உள்ள கன்னிங்ஹாம் சாலையில், தனது SUV காரில் நேற்று மாலை ராகுல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் பின்பகுதியில் சரக்கு ஆட்டோ ஒன்று வேகமாக மோதியது. இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய டிராவிட், ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தற்பொழுது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில், ஆட்டோ ஓட்டுநரும் முன்னாள் இந்திய வீரரும் ராகுல் டிராவிட்டுடன் வாக்குவாதம் செய்வதைக் காணலாம். இந்த சிறிய வாக்குவாதத்தைத் தொடர்ந்து, விபத்து குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Auto Annas are unstoppable— even Rahul Dravid would struggle to outmaneuver them! They squeeze into every possible gap, making Bengaluru’s traffic even more chaotic. For them, traffic rules seem nonexistent! @blrcitytraffic
pic.twitter.com/Z0ijYOKLbg

— Citizens Movement, East Bengaluru (@east_bengaluru) February 4, 2025


இதற்கிடையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 13288 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 10889 ரன்களையும் எடுத்துள்ளார். அண்மையில் கூட, அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் இருந்தார்.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதைத் தொடர்ந்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகி, அவருக்குப் பதிலாக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். தற்போது ஐபிஎல் அணியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

Read Entire Article