ARTICLE AD BOX
காமெடி கலந்த த்ரில்ல படம்... முதல் முறையாக சமந்தா தந்த அப்டேட்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, நடிப்பு தவிர பிட்னஸ் மற்றும் பிரத்யூஷா என்ற அறக்கட்டளை மூலம் குழந்தைகளையும் காத்து வருகிறார். தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் சமந்தா இளைஞர்கள் கொண்டாடும் துள்ளல் நிறைந்த படம் ஒன்றை தயாரித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை சமந்தாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்: நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள சமந்தா பாலிவுட்டில் சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். பெரிய அளவில் கவனத்தை பெறாவிட்டாலும் தொடர்ந்து படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தற்போது புதிய வெப் தொடரில் நடித்து வருகிறார். முன்னதாக த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர். அவர் நடிக்கும் பங்காரம் படத்திற்கு அவரை தயாரித்து நடித்து வருகிறார். சமப்ளத்தில் சரிபாதி பிரித்து கொடுப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

காதல்: பிக்கில் பால் விளையாட்டல் ஆர்வம் கொண்ட சமந்தா, சென்னை சூப்பர் சாம்பஸ் அணியை வாங்கி அதற்கான புரோமோஷன் பணியிலும் ஈடுபட்டார். இப்போட்டி நடைபெறும் போது இயக்குநர் ராஜ் நிடிமோருடன் இணைந்து கோர்த்து கை பிடித்தபடி நின்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது, இதை பார்த்த ரசிகர்கள் சமந்தா மீண்டும் காதலில் விழுந்தாரா? என கேள்விகள் கேட்க தொடங்கி விட்டனர். ஆனால், சமந்தா இதுகுறித்து எந்தவித பதிலும் தரவில்லை. சர்ச்சைகளை கடந்து தனக்கு பிடித்த விசயங்களை செய்வதில் சமந்தா ஆர்வம் காட்டி வருகிறார்.
முதல் படம்: த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் முதல் படத்தின் போஸ்டரை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு படத்தின் மூலம் தயாரிப்பாளராக சமந்தா அடியெடுத்து வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவினருடன அவர் எடுத்திருக்கும் புகைப்படத்தையும் சமந்தா வெளியிட்டுள்ளார்.
சுபம்: சினிமா பண்டி படத்தை இயக்கிய பிரவீன் கண்ட்ரேகு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம், காதல், இளமை, நட்பு என ஒரு ஜாலியான பொழுதுபோக்கு நிறைந்த படமாக உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. சமந்தா புதிய பயணத்தை தொடங்கியுள்ளதால் இப்படத்திற்கு சுபம் என பெயரிட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தா இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ஹர்ஷித் மல்கிரெட்டி, சரண் பெர்ரி, ஸ்ரேயா கோந்தம்,ஷாலினி கொடேபுடி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காமெடி கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மை இண்டி பங்காரம்: கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு சமந்தா நிற்கும் போஸ்டருடன் மை இண்டி பங்காரம் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இப்படத்தையும் சமந்தாவே தயாரிக்கிறார். இதில் அவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரிநததே. இவர் நடிக்கும் படத்தை தாண்டி சுபம் என்ற படம் திரைக்கு வர ரெடியாக இருக்கிறது. ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பரதா படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் சமந்தா.