ARTICLE AD BOX
விமல் நடிப்பில் உருவாகியுள்ள பரமசிவன் பாத்திமா எனும் திரைப்படம் சமுதாயத்தில் உள்ள மதம் சார்ந்த நம்பிக்கைகள், மதக் கலவரங்களைப் பற்றி பேசியுள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பரமசிவன் பாத்திமா படக்குழு
நடிகர் விமல், சாயா தேவி, எம்.எஸ். பாஸ்கர், கூல் சுரேஷ் அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பரமசிவன் பாத்திமா. இந்தப் படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்க, தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார். லக்ஷ்மி கிரியேஷன்ஸ் பேனரில், இயக்குநர் இசக்கி கார்வண்ணனே படத்தை தயாரித்துள்ளார்.
எதிர்பார்ப்பை அதிகரித்த டிரெயிலர் ரிலீஸ்
இந்தப் படத்தின் பெயரும், இந்தப் படத்தின் டிரெயிலர் வீடியோவை வெளியிட்ட நபர்களாலாலுமே படத்திற்கான புரொமோஷன் கிடைத்துள்ளது. நேற்று மார்ச் 14 ஆம் ேசி இப்படத்தின் டிரெயிலரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும் அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டனர். தமிழ்நாட்டின் பெரும் அரசியல் புள்ளிகள் இருவர் ஒரு படத்தின் டிரெயிலரை வெளியிடப் போகிறார் என்ற அறிவிப்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கத் தொடங்கியது.
சமூக பிரச்சனை
பின் டிரெயிலர் வெளியான உடன், அதில் பேசப்பட்ட விஷயங்கள் தற்போது வைராலாகி வருகிறது. காதல், மதம், மதமாற்றம், மதக் கலவரம் என டிரெயிலர் முழுவதும் இந்த 3 விஷயங்களின் தொடர்ச்சியாகவே உள்ளது. இதனால், டிரெயிலரில் வரும் வசனங்கள் சமூக பிரச்சனையை எழுப்பக் கூடிய சூழலும் உள்ளது.
காதல் விவகாரம்
படத்தின் டிரெயிலரில் குறிப்பிட்ட தகவலின் படி, சுப்ரமணியபுரம் எனும் ஊர் இந்து மத நம்பிக்கையை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், யோக்கோபுரம் எனும் ஊர் கிருத்தவ நம்பிக்கைகளை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஊருக்கும் பிரச்சனை இருக்கும் சமயத்தில் இவ்விரு கிராமத்தை சேர்ந்த விமலும் சாயா தேவியும் காதலிக்கின்றனர்.
கிராமங்களிடையே பகை
இந்த காதலுக்காக இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போகின்றனர். இவர்களைத் தேடி ஊருக்குள் வரும் போலீஸ் விசாரணையில் தெரிய வருவது என்ன?, இந்து கிருத்துவ சண்டைக்குள் திணிக்கப்படும் இஸ்லாமியரின் உடை என காட்சிகள் தீவிரமாக காட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கிருத்தவராக நடித்துள்ள எம்எஸ் பாஸ்கர் தங்கள் கிராமத்து மக்கள் படிப்பறிவு உள்ளவர்கள் என்றும் அவர்களுக்கு எதிராளிகளை மன்னிக்கும் குணம் உண்டு என்றும் பெருமை பேசுகிறார். அதே சமயம், சுப்ரமணியபுரத்தினரை முரட்டுத் தனமான ஆளுங்க என விமர்சிக்கிறார்.
மத விவகாரம்
இந்நிலையில், மதமாற்ற சம்பவங்களுக்கு எதிராக விமல் குரல் கொடுப்பது போன்ற காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில், மதம் மாறியவர்களும் மாறாதவர்களும் சண்டை போட்டால் அதை மதக் கலவரம்ன்னு சொல்றீங்க என்பது போன்ற வசனங்கள் இடம் பெறுகின்றன. அத்தோடு விமல் எம்.எஸ். பாஸ்கர் உரையாடல்களும் முக்கியத்துவம் பெறுகிறது.
வெள்ளைக்காரன் போட்ட பிச்ச
நீ இவ்வளவு தூரம் பேசுறது படிச்சதால தான். அந்த படிப்பு வெள்ளைக் காரன் போட்ட பிச்ச. அவங்க இல்லைன்னா நீங்க பிச்சை எடுத்துட்டு தான் இருக்கணும் என கூற, வெள்ளைக் காரனே இங்க பிச்சை எடுக்க தான் வந்தான் எனக் கூறுவார். அத்தோடு என்னை எல்லாம் மாத்த முயற்சி பண்ணாத எனவும் பேசியிருக்கிறார் விமல்.
மேரியம்மாவான மாரியம்மா
இதற்கு நடுவில் இந்த இரு ஊருக்கும் பிரச்சனை நடக்கவே இஸ்லாமியர் தான் காரணம் என ஒரு காட்சி வருகிறது. அத்தோடு போலீஸ்காரரரிடம் பேசும் எம்எஸ் பாஸ்கர், யோக்கோபுரத்தில் வெள்ளைக்காரர்கள் சர்ச் கட்டிய போது, இவர்கள் மாரியம்மன் சிலையை வந்து வைத்து விட்டார்கள். அப்போதிலிருந்து நாங்கள் மாரியம்மாவை மேரியம்மாவாக கும்பிட்டு கொண்டிருக்கிறோம் என பேசியிருக்கிறார்.
இந்தக் காட்சிகள் எல்லாம் மதத்தையும், அதன் பெருமையையும் தூக்கிப் பிடித்தால் தமிழ்நாட்டில் தேவையில்லாத சர்ச்சைகள் வரும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
