ARTICLE AD BOX

OTT: இந்திய சினிமாவில் இந்த வாரம் ஓடிடி அப்டேட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமீபத்திய காலமாக வாரா வாரம் வெளியாகும் ஓடிடி அப்டேட் பலருக்கும் டைம் பாஸாகவே அமைந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் அதிகபட்சமான காதல் பட லிஸ்ட்களாகவே வெளியாகி இருக்கிறது.
சாய் பல்லவி, நாக சைதன்யா நடிப்பில் வெளியாகும் தண்டேல் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த படமும் மிகப்பெரிய வசூல் குவித்த நிலையில் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. நெட்பிளிக்ஸில் 7ந் தேதி வெளியாக இருக்கிறது.
அசிஃப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ரெக்கசித்திரம். ஜோவின் டி செக்கோ இயக்கத்தில் 40 வருடமாக கொலை வழக்கில் இருக்கும் மர்மத்தினை கண்டுபிடிக்கும் காவலரின் சூப்பரான கதை.
இப்படம் நாளை பிப்ரவரி 7ந் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. குட் நைட் மற்றும் லவ்வர் என இரண்டு படங்களை கொடுத்த மணிகண்டன் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படமான குடும்பஸ்தன் ஓடிடிக்கு வந்துள்ளது.
யதார்த்தமான கதையாக குடும்பஸ்தன் நல்ல வரவேற்பை பெற்று பிப்ரவரி 7 ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மூன்று படங்களுமே வித்தியாசமான கதைகள் என்பதால் ரசிகர்கள் இந்த வாரம் செம டைம் பாஸாக அமையும் எனக் கூறப்படுகிறது.