காதல் திருமணம் குறித்து மனம் திறந்த பாவ்னி... மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை!

4 days ago
ARTICLE AD BOX

காதல் திருமணம் குறித்து மனம் திறந்த பாவ்னி... மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை!

News
oi-Pandidurai Theethaiah
| Published: Wednesday, February 19, 2025, 20:48 [IST]

சென்னை: விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான பிக்பாஸ் -5 நிகழ்ச்சியில் மூலம் பாவ்னி - அமீர் பிரபலமாகினர். போட்டியில் பங்கேற்றதன் மூலம் நட்பாகி காதலித்து வந்தனர். இருவரும் சமூகவலைதளத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து வந்தனர். இந்த காதல் ஜோடி அஜித் நடித்த துணிவு படத்தில் ஒன்றாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் அமீர் - பாவ்னி ஒன்றாக இணைந்து நடனம் ஆடினர். மக்களுக்கு பிடித்த ஜோடியாகவும் கொண்டாடப்பட்டது. இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி தான் நடனத்தை சிறப்பாக செய்ய முடிகிறது என தொகுப்பாளர்களின் பாராட்டையும் பெற்றனர். பின்னர், திரையில் ஒரு சில படங்களில் நடித்தாலும், இருவரும் எந்தவித பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்தனர். அவ்வப்போது பாவ்னிக்கு அமீர் சர்ப்ரைஸ் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி வைரலாவதும் உண்டு.

Pavani - Amir Love Story Love marriage -

காதல் திருமணம்: கடந்த 3 ஆண்டுகளாக அமீர்-பாவ்னி லிவிங் லைஃப்பில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், காதலர் தினத்தன்று திருமண தேதியை அறிவித்தனர். வரும் ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வீடியோவுடன் காதல் தேதியை அறிவித்தனர். இதற்கு, நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஏப்ரல் 19ஆம் தேதி ஹல்தி கொண்டாட்டைத்தையும், திருமணத்தன்று மாலை வரவேற்பு நிகழ்வையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

மனம் திறந்த பாவ்னி: காதல் திருமணம் என்றாலே மகிழ்ச்சியான செய்திதான். நடிகை பாவ்னி தனது சொந்த வாழ்க்கையில் பல துயரங்களை கடந்து மீண்டும் திருமண பந்தத்தில் இணைகிறார். அமீருடன் உடனான காதலையும், இருவருக்கும் உள்ள புரிதலையும் சமீபத்தில் பிரபல இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அமீர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். நான் இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால், எங்களது திருமணம் மதம் சார்ந்து நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

Pavani - Amir Love Story Love marriage -

எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவோம்: அமீரும் நானும் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவோம். எங்களுக்குள் எந்தவித பாகுபாடும் கிடையாது. அவரது பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடுவோம். அமீர் நமாஸ் செய்வார். மேலும், ரமலான் பண்டிகை காலத்தில் அவருக்கு நான் உதவிகள் செய்வேன். திருமணத்திற்காக நாங்கள் மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அமீர் இல்லையென்றால் போர் அடிக்க தொடங்கிவிடும். நான் நானக இருப்பதற்கான சுதந்திரத்தை கொடுத்துள்ளார். ஒரு பெண்ணிற்கு இதைவிட வேறு என்ன வேண்டும், எனக்கு பொருத்தமான பையனாக அமீர் உள்ளார் என மனம் நெகிழ்ந்து பாவ்னி தெரிவித்தார்.

காதல் மதத்திற்கு அப்பாற்பட்டது. எங்கள் இருவருக்குள்ளும் பரஸ்பர நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் இருவரது மத நம்பிக்கைகளை மதிக்கிறோம். காதல் மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. அமீரை நல்ல நண்பனாகவும், ஒரு நல்ல மனிதராகவும் பார்க்கிறேன். காதல் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாவ்னி தெரிவித்துள்ளார். அமீர் வந்த பிறகு என் வாழ்வில் நிறைய மாற்றங்களை கண்டுள்ளேன். நம்பிக்கை வந்த பிறகே காதலை சொன்னேன் என அவர் தெரிவித்தார்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Pavni opens up about love marriage, காதல் திருமணம் குறித்து மனம் திறந்த பாவ்னி
Read Entire Article