காதலனை தேடும் பெண்.. படத்தில் மறைந்து இருக்கும் நபர் எங்கே? 8 செகண்டில் கண்டுபிடிங்க

2 days ago
ARTICLE AD BOX

காதலனை தேடும் பெண்.. படத்தில் மறைந்து இருக்கும் நபர் எங்கே? 8 செகண்டில் கண்டுபிடிங்க

Chennai
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண் ஒருவர் தன் காதலன் இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறார். அந்த நபர் படத்தில் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய வைக்க கூடியது. இந்த இமேஜ்களை பொறுத்தவரை மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியகவும் ஆழ்ந்து பார்த்தால் வேறு விதமாகவும் தெரியும். இதனால், இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் சவாலானது.

optical illusion offbeat trend

அதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுத்தால் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விடையை சரியாக கண்டுபிடிக்க கொஞ்சம் ஆழ்ந்த அறிவாற்றல் தேவைப்படும் என்றால் மிகையல்ல. ஒருவரின் புத்திக்கூர்மை, சிந்தனை ஆற்றல் உள்ளிட்டவற்றை கூட இல்யூஷன் படங்கள் வாயிலாக கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் அடிக்கடி வைரல் ஆகி வருகின்றன. சரி இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தில் பெண் ஒருவர் உள்ளர். உண்மையில் பெண் மட்டுமே இல்லை. பெண்ணின் காதலரும் இந்த படத்தில் தான் உள்ளார். காதலர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க் ஆகும்.

உங்க கண்களுக்கு சவால்.. படத்தில் பூனை எங்கே இருக்கு? 8 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்!
உங்க கண்களுக்கு சவால்.. படத்தில் பூனை எங்கே இருக்கு? 8 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்!

சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா? உங்களுக்கான டைம் தொடங்கியது. படத்தை நன்றாக பாருங்கள்.. படத்தில் கடற்கரை ஒன்றில் பெண் நின்று கொண்டு இருக்கிறார். அந்த பெண்ணை சுற்றிலும் பாறைகள், செடிகள் தென்படுகின்றன. எனவே பெண்ணின் காதலரும் இங்கே உள்ள ஏதாவது ஒரு இடத்தில்தான் இருக்க வேண்டும் என யூகித்து இருப்பீர்கள்.

ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! படத்தில் ”கேரட்” எங்கே இருக்கிறது? 3 செகண்டில் சொல்லுங்க
ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! படத்தில் ”கேரட்” எங்கே இருக்கிறது? 3 செகண்டில் சொல்லுங்க

உங்களுக்கான டைம் முடிந்தது. பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். விடையை இன்னமும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கூடுதலாக ஒரு 5 செகண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போதும் முயற்சித்து பாருங்கள். உங்களுக்காக ஒரு சின்ன டிப்ஸ் ஒன்றை கொடுக்கிறோம்.

அதிபுத்திசாலியால் தான் முடியும்! படத்தில் இன்னொரு நபர் எங்கே இருக்கிறார்? 5 செகண்ட் தான் டைம்!
அதிபுத்திசாலியால் தான் முடியும்! படத்தில் இன்னொரு நபர் எங்கே இருக்கிறார்? 5 செகண்ட் தான் டைம்!

காதலனை இதயத்தில் வைத்துக்கொண்டு அந்த பெண் தேடிக்கொண்டு இருக்கிறார். சரி இப்பொது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். இப்போதும் கண்டுபிடிக்காதவர்களுக்கு விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

optical illusion offbeat trend
More From
Prev
Next
English summary
In the optical illusion image given here, a woman is searching for her lover without knowing where he is. Today's challenge is to find where that person is in the image. That too, you have to find and tell them in 8 seconds.
Read Entire Article