``காட்டுமாட்டை மீட்க இரக்கமின்றி பேரம் பேசினார்கள்..." - வனத்துறையை சாடும் மக்கள்; என்ன நடந்தது?

6 hours ago
ARTICLE AD BOX

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி வனக்கோட்டத்தில் காடுகளை இழந்து தவிக்கும் காட்டு மாடுகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி விளை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பரிதவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வறட்சி காலங்களில் தண்ணீர் தேடி அலையும் காட்டு மாடுகள் சட்டவிரோத மின் வேலிகள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் போன்றவற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன.

உயிரிழந்த காட்டு மாடு

இதற்கான ஆக்கப்பூர்வ தடுப்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டினை சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

கேரள வாகனத்தில் TN நம்பர் பிளேட்; வயநாட்டில் இருந்து வால்பாறை வரை வனவிலங்கு வேட்டை... பகீர் பின்னணி

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கேத்தி பாலாடா பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு கழிவுநீர் தொட்டிக்குள் காட்டு மாடு ஒன்று சிக்கித் தவிப்பதை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக குந்தா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், நிகழ்விடத்திற்குச் சென்ற வனத்துறையினர், அந்த காட்டுமாடு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகவும், ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதன் உடலை வெளியே மீட்டெடுக்க வேண்டுமென்றால் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை தர வேண்டும் என மக்களிடம் வற்புறுத்தியதாக வனத்துறை மீது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உயிரிழந்த காட்டு மாடு

இது குறித்து தெரிவித்த கேத்தி பாலாடா பகுதி மக்கள், "இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . அவர்களின் குடியிருப்பு அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியின் மீது நடந்து சென்ற காட்டு மாட்டின் பின்னங்கால்கள் இரண்டும் சிக்கியிருக்கியது. உயிருக்கு போராடி துடிதுடித்துக் கொண்டிருந்த காட்டுமாட்டை பார்த்த வனத்துறையினரோ, ஏற்கெனவே இந்த காட்டு மாடு உயிரிழந்ததாகவும் அதன் உடலை மீட்டு அகற்ற ரூ.20,000 கொடுத்தால் மட்டுமே முடியும் என ஈவிரக்கமின்றி பேரம் பேசி வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக காட்டுமாட்டின் சடலம் இங்கேயே கிடந்து ஈக்கள் மொய்த்து வருகின்றன. இதுவரை இது போன்ற அவலம் நடந்ததே இல்லை " என்றனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து குந்தா வனச்சரகர் ஸ்ரீனிவாசனை தொடர்பு கொண்டு பேசினோம், "நான் விடுமுறையில் இருக்கிறேன். சம்மந்தப்பட்ட பொறுப்பு வனச்சகரை தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளுங்கள்" என முடித்துக் கொண்டார். நீலகிரி வனக்கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர் கௌதமை தொடர்பு கொண்டு பேசினோம், "இது குறித்து என்னுடைய கவனத்திற்கும் வந்தது. விசாரணை நடத்தி வருகிறேன். இறந்த வனவிலங்குகளை அகற்ற அனைத்து வசதிகளும் உள்ளன. பணம் கேட்டது குறித்து பணியாளர்களிடம் விசாரிக்கிறேன்" என்றார்.

வனவிலங்கு வேட்டையில் இளைஞர் சுட்டுக் கொலை... யானை தாக்கி உயிரிழந்ததாக நாடகம்.. 13 பேர் கைது!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Read Entire Article