ARTICLE AD BOX
Published : 18 Mar 2025 08:35 AM
Last Updated : 18 Mar 2025 08:35 AM
காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரேல் - காசா இடையே கடந்த ஜனவரி 19-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்குவந்த நிலையில் நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதலாக இது அமைந்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ச்சியாக சுணக்கம் காட்டி வருகிறது. அதேபோல் இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் தூதர், மற்றும்பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதையடுத்து காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளோம். இந்த நிமிடம் முடல் ஹமாஸுக்கு எதிரான ராணுவ பலம் படிப்படியாக அதிகரிக்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மத்திய காசாவில் டேர்-அல்-பாலா எனுமிடத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று குடியிருப்புகள் தரைமட்டமாகின. இதேபோல், கான் யூனிஸ், ராஃபாவிலும் இத்தாக்குதல் நீண்டுள்ளது. இத்தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
மூன்று கட்ட போர் நிறுத்தம்: இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
தொடர் எச்சரிக்கைகளுக்குப் பின்.. முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை பக்கத்தில், “ஷாலோம் ஹமாஸ் என்றால் ‘ஹலோ’ அல்லது ‘குட்பை’ என்று அர்த்தம். விருப்பத்தை நீங்களே தேர்வு செய்யலாம். இப்போதே உங்களிடம் மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் உங்களால் கொல்லப்பட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக ஒப்படைக்கவேண்டும். மனநிலை பிறழ்ந்த நோயாளிகள் தான் உடல்களை தங்களுடன் வைத்திருப்பர். நீங்களும் மனநிலை பிறழ்ந்த நோயாளிகள்தான். அனைத்தையும் முடிக்க தேவையான எல்லா உதவிகளையும் நான் இஸ்ரேலுக்கு அனுப்புகிறேன். நான் கூறியபடி நீங்கள் செய்யாவிட்டால், ஹமாஸ் குழுவில் ஒருவர்கூட பாதுகாப்பாக இருக்கமுடியாது
உங்களால் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட உங்களின் முன்னாள் பிணைக் கைதிகளை நான் இப்போது தான் சந்தித்தேன். இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கை! . காசா மக்களைப் பொறுத்தவரை உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது. ஹமாஸ்கள் காசாவை விட்டு வெளியேறும் நேரம் இது. நீங்கள் யாரையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நீங்கள் கொல்லப்படுவீர்கள். சிறந்த முடிவை எடுங்கள். இப்போதே பிணைக்கைதிகளை விடுதலை செய்யுங்கள் அல்லது அதற்காக பின்னர் கூலி கொடுக்க வேண்டியது இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் பிடித்துச் செல்லப்பட்ட மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கா விட்டால், நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் எச்சரித்திருந்தார்.
இந்த எச்சரிக்கைகள் பல கட்டங்களாக, பல விதமாக கொடுக்கப்பட்ட நிலையில் பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் எந்த முன்னேற்றமும் காட்டாததைச் சுட்டிக் காட்டி இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் - ட்ரம்ப் இன்று முக்கிய பேச்சுவார்த்தை
- பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது
- உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க அதிபர் புதினிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி
- பிரான்ஸைவிட்டு வெளியேறிய டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் - பின்னணி என்ன?