ARTICLE AD BOX
காங்கோ குடியரசில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகினர்.
தாது வளம் நிறைந்த காங்கோவில் கட்டுப்பாட்டுக்காக போராடும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று. கோமா நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எம்23 நடத்திய தாக்குதலில் ஒரு வாரத்தில் மட்டும் 773 பேர் வரையில் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கோமா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
காங்கோவில் சுமார் 25,000 இந்தியர்கள் உள்ள நிலையில், அவர்களில் சுமார் ஆயிரம் பேர் கோமா நகரில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதையும் படிக்க: நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!