கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ …. இணையத்தில் வைரலாகும் அடுத்தடுத்த போஸ்டர்கள்!

4 hours ago
ARTICLE AD BOX

கவின் நடிக்கும் மாஸ்க் படத்தின் அடுத்த அடுத்த போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.கவின் நடிக்கும் 'மாஸ்க்' .... இணையத்தில் வைரலாகும் அடுத்தடுத்த போஸ்டர்கள்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் கவின் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அதேசமயம் டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கவினுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வர தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே கிஸ், ஹாய் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் கவின். இதற்கிடையில் இவர் அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். கவின் நடிக்கும் 'மாஸ்க்' .... இணையத்தில் வைரலாகும் அடுத்தடுத்த போஸ்டர்கள்!ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க நடிகை ஆண்ட்ரியா வில்லியாக நடிக்கிறார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கவின் நடிக்கும் 'மாஸ்க்' .... இணையத்தில் வைரலாகும் அடுத்தடுத்த போஸ்டர்கள்!மேலும் விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு 2025 கோடையில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே சமூக வலைதளங்களை பரவி வந்தது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர்களும் அடுத்தடுத்த புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article