ARTICLE AD BOX
நீங்கள் மன அழுத்தத்தால் போராடுகிறீர்கள் என்றால், மனதை லேசாக வைத்துக்கொள்வது எப்படி என்று இங்கு காணலாம்.

How To Boost Mental Health : இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம், மனசோர்வு, பதட்டம், கவலை இல்லாத ஆட்களே இல்லை. யாருக்கு தான் தாங்க முடியாத கஷ்டம் இல்லை. எல்லோருக்குமே கண்டிப்பாக இருக்கும். படிப்பு, வேலை, குடும்பம், பணம், எதிர்காலம் என ஏதாவது ஒன்றை குறித்து பயம், கவலை நம்மை துரத்திக் கொண்டே தான் இருக்கும். நாம் நம்முடைய உடலை எப்படி பாதுகாக்கிறோமோ அதே போல தான் மனதையும் பாதுகாப்பது ரொம்பவே முக்கியம்.. ஆனால் பெரும்பாலானார் இதை மறந்து விடுகிறார்கள். மனம் அமைதி இல்லாமல் இருந்தால் பதட்டம், மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் உடலில் நிறைய பிரச்சனைகள் தான் ஏற்படும். மன அழுத்தத்தை மேம்படுத்த சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும்.. நீங்கள் கவலையின்றி சந்தோஷமாக இருக்க முடியும் அது என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது ஆன்லைன் உலகம் என்பதால் யாரும் யாருடனும் பேசுவதற்கு கூட நேரம் கொடுப்பதில்லை. ஆனால் மன ஆரோக்கியத்துடன் இருக்க பிறருடன் மனம் விட்டு பேச வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் என்னை யார் உங்களுடன் ரொம்பவே அன்பாக இருக்கிறார்களோ அவர்களுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். இதற்காக நீங்கள் அவர்களுடன் வெளியே சென்று உணவருந்தலாம். அந்த சமயத்தில் அன்றைய தினம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசலாம். மற்றவர்களுடன் நல்ல உறவு வைத்திருப்பது மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் உங்களது எண்ணங்களை பிறரிடம் தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் ஒரு நல்ல உறவை உருவாக்குங்கள். முக்கியமாக நீங்கள் யாருடன் பேச விரும்பினால் whatsapp, சோசியல் மீடியா அல்லது போனில் அழைத்து பேசுவதை தவிர்த்து, நேரில் சென்று அப்போதுதான் உங்கள் மனதில் பாரம் குறையும்.

உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்முடைய மனதும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்காக நீங்கள் வாக்கிங், ஸ்விம்மிங், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றை வழக்கமாக செய்யலாம். உடற்பயிற்சி செய்வது நல்லது தானே என்று எண்ணி, மாணிக்க கணக்கில் தீவிர உடற்பயிற்சி ஒருபோதும் செய்ய வேண்டாம்.

எப்போதுமே புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் போது மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் உங்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும்போது புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பிறகு அது நட்பாக மாறிவிடும். இதற்காக நீங்கள் சமையல், பாட்டு, நடனம், பிறமொழி என ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆனால் உங்களுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தை ஒருபோதும் கற்க முயற்சிக்காதீர்கள்.
இதையும் படிங்க: கடுப்பேத்தும் சூழலிலும் கம்முன்னு இருந்து, மன அமைதியை பாதுகாக்க சூப்பரான வழிகள்

யாராவது நமக்கு பிறந்தநாளிற்கு பரிசு கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்போம். அதுபோல நீங்களும் பிறருக்கு பரிசு கொடுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவதை பார்த்து நீங்களும் மகிழ்ச்சியாக உணருவீர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என யாருக்காவது சின்ன சின்ன பரிசுகளை கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவது மட்டுமின்றி, நீங்களும் மகிழ்ச்சியையும் பெறுங்கள்..
இதையும் படிங்க: மனநலம்: மன அழுத்தத்தை குறைக்கும் 5 ஜப்பானிய வழிகள்

உண்மையில், நடந்து முடிந்த விஷயங்களை ஒருபோதும் மாற்றவே முடியாது என்பதே உங்களது மனதில் திட்டவட்டமாக எழுதிக் கொள்ளுங்கள். அவற்றைக் கடந்து செல்வது தான் முடியும்.. எப்போதோ செய்த தவறை நினைத்து இப்போது வரை என்னை வரிந்து கொண்டிருப்பது எந்த ஒரு பயனும் இல்லை. அதுபோல எதிர்காலத்தை குறித்த பயம் தேவையற்றது. எனவே கடந்த கால மற்றும் எதிர்கால விஷயங்களை நினைத்து கவலைப்படாமல் நிகழ்காலத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களில் கூட சந்தோஷப்படுங்கள்.. என்ன செய்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற சூட்சுமத்தை அறிந்து கொண்டால் போதும் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும். இந்த விஷயத்தை ஒரு போதும் மறக்காதீர்கள்.