கள்ளக்காதல் உறவை தட்டிக்கேட்டதால் பயங்கரம்; கழுத்து, கைநரம்பு அறுத்து துடிதுடிக்க கொலை.!

4 hours ago
ARTICLE AD BOX

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் நகரில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 30). இவர் இறைச்சி வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். ஆனந்தின் மனைவி துளசி. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

கடந்த மார்ச் 01 அன்று, துளசி தனது குழந்தைகளோடு தாய் வீட்டிற்குச் சென்றார். அன்றைய நாளின் இரவே, வீட்டில் தனியாக இருந்த ஆனந்த் கழுத்து, கை நரம்பு அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தார். 

இதையும் படிங்க: இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகம்; மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கொடூர கணவன்.!

கொலை நடந்தது அம்பலம்

அவரின் மர்ம மரணம் தொடர்பாக விசாரித்த காவல்துறையினர், ஸ்டிக்கர் கடை நடத்தி வந்த சிலம்பரசன் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியானது.

அதாவது, சிலம்பரசன் - ஆனந்தி அக்கா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் இருவருக்கும் கள்ளக்காதலை ஏற்படுத்தியது. இந்த விஷத்தை ஆனந்த் தட்டிக்கேட்க, அவரை சிலம்பரசன் தாக்கி இருக்கிறார். 

இதனால் ஆனந்தின் அக்கா, சிலம்பரசனுடன் கொண்ட தொடர்பை கைவிட்டார். இந்த விஷயத்தில் ஆத்திரத்தில் இருந்த சிலம்பரசன், கடந்த 1 ம் தேதி ஆனந்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த ஆனந்தை கொலை செய்து இருக்கிறார் என்பது தெரியவந்தது. 

இதையும் படிங்க: ஆம்பூர்: 7 வயது சிறுமி பலாத்காரம்.. 16 வயது சிறுவன் போக்ஸோவில் கைது.!

Read Entire Article