கள் இறக்க தடையை நீக்க வேண்டும்; கோவையில் கள் குடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

13 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு அரசு பனை, தென்னை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Advertisment

இதில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார். இதில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கண்டனப் பதாகைகளை கழுத்தில் அணிந்தவாறும் கையில் ஏந்தியும், தென்னை கீற்றுகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

Advertisment
Advertisements

மேலும் ஆர்ப்பாட்டத்தில் சில விவசாயிகள் கள் குடித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர். தொடர்ந்து தமிழகத்தில் கலப்படத்தை காரணம் காட்டி கள்ளுக்கு தடை விதித்துள்ளதாகவும் அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை கிடையாது எனவும் தெரிவித்த விவசாயிகள் அந்த மாநிலங்கள் மட்டும் கலப்படங்களை கட்டுப்படுத்தும் பொழுது இங்கு அதனை கட்டுப்படுத்த முடியாதா எனவும் கேள்வி எழுப்பினர்.

பி.ரஹ்மான், கோவை 

Read Entire Article