கல்வியால் வறுமையை வென்ற ஒடிசா இளைஞர்.. அன்று இருந்த வீடு.. இன்று துபாயில் இருக்கும் வீடு

7 hours ago
ARTICLE AD BOX

கல்வியால் வறுமையை வென்ற ஒடிசா இளைஞர்.. அன்று இருந்த வீடு.. இன்று துபாயில் இருக்கும் வீடு

Dubai
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

துபாய்: இன்றைக்கு நன்கு வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் சரியாக படிக்காமல் போனாலும், வாழ்வில் ஜெயிக்கலாம் என்றும், படிப்பு ஒன்று தான் வாழ்க்கை இல்லை என்றும் பேசுகிறார்கள்... ஆனால் வறுமையில் உள்ளவர்களுக்கு வறுமையை விரட்டவும், அறிவினை பெறவும் கல்விதான் மிகப்பெரிய வழியாகும். கல்வியால் வறுமையை வென்ற ஒடிசா இளைஞர், அன்று இருந்த வீட்டையும், துபாயில் உள்ள வீட்டையும் பதிவிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.

கல்வி என்ன செய்து விடும், கல்வியால் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று வசதி படைத்தவர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் கல்வியால் வளரும் அறிவு மற்றும் அந்தஸ்து தான் இந்தியாவில் ஏழை மக்களின் வறுமையை விரட்டி அடித்து வருகிறது. வறுமையை வென்ற கோடிக்கணக்கான மக்கள் சொல்லும் ஒன்று என்றால், படிப்பால் தான் ஜெயித்தேன் என்பார்கள்.. ஆம்.. கல்வி தான் அவர்களை உயர்த்தியது.

dubai house education


படிக்காவிட்டால், தூய்மை பணியாளரின் மகனை தூய்மை பணியாளரின் மகன் என்று தான் சொல்வார்கள். படித்து முன்னேறி விஏஓ, தாசில்தார், கலெக்டர் என்று மாறினால், அவருடைய மகனை விஏஓ மகன் என்றும், தாசில்தார் மகன் என்றும், கலெக்டர் மகன் என்றும் கூறுவார்கள். படித்து ஜெயித்த உங்களை வேண்டுமானால் தூய்மை பணியாளரின் மகன் என்று கூறினாலும், உங்கள் சந்ததிகளை அப்படி கூறாது. உங்கள் சந்ததியின் அடையாளத்தையே மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு. நிறைய ஏழை மாணவர்கள் அரசு பள்ளியில் படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என்ற உயர்ந்த பதவிகளை அடைந்துள்ளனர். இதேபோல் வருமான வரித்துறை அதிகாரி, சிபிஐ அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, வன அதிகாரி என்று அரசின் பல்வேறு உயர் பதவிகளை அலங்கரித்துள்ளனர்..

தேனி பக்கத்தில் ஒரு கிராமத்தில் அண்ணன் தம்பிகள் இருந்தார்கள். இருவருமே நகை பட்டறையில் கூலி வேலை செய்பவர்கள்.. 1990களில் நடந்த கதை இது.. அண்ணனுக்கு இரண்டு மகன்கள் இருவரையும் படிக்க வைக்கவில்லை.. ஆனால் தம்பிக்கோ நான்கு மகள்கள்.. ஆனால் அவர் நான்கு பேரையும் படிக்க வைத்தார். படிக்க வைக்காமல் கட்டிக் கொடுக்க வேண்டியது தானே ஊரே அவரை ஏளனம் பேசியது. ஆனால் நான்கு மகள்களையும் படிக்க வைத்தார். பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு என்று படிக்க வைத்தார். இன்று நான்கு பிள்ளைகளுமே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களாக வசிக்கிறார்கள். வறுமையை வென்றுவிட்டார்கள்.. ஆனால் அண்ணனின் மகன்கள் படிக்காத காரணத்தால் அப்பா செய்த அதே கூலி வேலையை இன்று செய்கிறார்கள்..

dubai house education


இதேபோல் அண்ணன் தம்பிகள்.. தேனி பக்கம் தான். ஊரில் மேளம் அடிக்கும் வேலை செய்து வந்தார்கள். ஒருவர் தன் பிள்ளைகள் இருவரை படிக்க வைத்தார். இன்னொருவர் படிக்காத பிள்ளைகளை சரியாக கண்டு கொள்ளவில்லை.. அதில் படித்த பிள்ளை மட்டும் இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய ஐடி என்ஜினியராக செட்டில் ஆகிவிட்டார். படிக்காத பிள்ளைகள் ஊரில் பெயிண்ட் அடிக்கும் கூலி வேலைக்கு சென்று வாழ்கிறார்கள். இது இங்கு மட்டுமல்ல.. எல்லா ஊர்களிலும் நடக்கிறது.

ஆனால் படித்தவர்கள் அரசு வேலை மற்றும் ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சென்று , சொந்தமாக வீடு, கார், நல்ல பள்ளியில் படிப்பு, உயர்தரமான வாழ்க்கை என்று மாறிவிட்டார்கள்.. அப்படி படிப்பால் முன்னேறியவர் தான் ஒடிசாவைச் சேர்ந்த சௌமேந்திரா ஜெனா.. இவர் ஒடிசாவில் பழைய ஓட்டு வீட்டில் வறுமையுடன் படித்துள்ளார். இன்று கல்வியால் முன்னேறி துபாயில் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார்.

இது தொடர்பாக சௌமேந்திரா ஜெனா வெளியிட்ட பதிவில், அந்த காலத்தில் இதுதான் என் வீடு - ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய நகரமான ரூர்கேலாவில் நான் பிறந்து, வளர்ந்தேன். 12 ஆம் வகுப்பு வரை (1988-2006) படித்தேன். எனது வீட்டை நினைவுக்காக 2021 இல் மீண்டும் ஒருமுறை பார்வையிட்டேன். இன்று, துபாயில் உள்ள எனது வீடு இது தான்... 17 வருட இடைவிடாத கடின உழைப்பு மற்றும் தூக்கத்தை மறந்து உழைத்தேன். குறுக்குவழிகள் இல்லாமல் நேர்மையாக பயணித்து இந்த நிலையை அடைந்துள்ளேன்.. வெற்றிக்கு நேரம் எடுக்கும்... ஆனால் ஒவ்வொருவரும் சாக்கு சொல்வார்கள்... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
English summary
Motivational success story tamil : Odisha youth who overcame poverty through education posts pictures of his house back then and his house in Dubai
Read Entire Article