ARTICLE AD BOX
சீனாவோட மக்கள் தொகை குறைஞ்சுகிட்டே போறது அவங்களுக்கு பெரிய கவலையா இருக்கு. அதனால சீன அரசாங்கமும், அங்க இருக்குற கம்பெனிகளும் இளைஞர்கள் மேல புதுசு புதுசா ரூல்ஸ் போட்டு டார்ச்சர் பண்றாங்க. ஒரு சீன கம்பெனி சமீபத்துல அவங்க ஊழியர்கள சீக்கிரமா கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க சொல்லி பிரஷர் கொடுக்குறாங்க. அப்படி பண்ணலைன்னா வேலைய விட்டு தூக்கிருவேன்னு சொல்றாங்க.
எல்லா ஊழியர்களும் கல்யாணம் பண்ணனும்
சீனாவோட ஷான்டாங் மாகாணத்துல இருக்குற Shandong Shuntian Chemical Group அவங்க கம்பெனில வேலை செய்ற 1200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரு புது ரூல்ஸ் சொல்லியிருக்காங்க. அதன்படி 28 வயசுல இருந்து 58 வயசு வரைக்கும் கல்யாணம் ஆகாதவங்க, விவாகரத்து ஆனவங்க எல்லாருமே 2025 செப்டம்பர்க்குள்ள கல்யாணம் பண்ணனும். இல்லன்னா அவங்க வேலை போறதுக்கு வாய்ப்பு இருக்கு.
நோட்டீஸ்ல கம்பெனி என்ன சொல்லிருக்கு
சீன கம்பெனி ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தெளிவா சொல்லியிருக்காங்க. மார்ச் மாசம் முடியுறதுக்குள்ள கல்யாணம் பண்ணாதவங்க மார்ச் மாசம் கடைசில சுயவிமர்சன கடிதம் எழுதணும். அதுக்கப்புறம் ஜூன் மாசம் வரைக்கும் கல்யாணம் பண்ணாம இருந்தா அவங்கள பத்தி கம்பெனி தனியா விசாரிச்சு என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுவாங்க. செப்டம்பர் மாசம் வரைக்கும் கல்யாணம் பண்ணலைன்னா வேலைய விட்டு தூக்கிருவாங்கன்னு சொல்லியிருக்காங்க.
சீனா கம்பெனி
சீன கம்பெனியோட இந்த புது ரூல்ஸ சோசியல் மீடியால நிறைய பேரு கிண்டல் பண்றாங்க. ஒருத்தர் எழுதியிருக்காரு - இந்த லூசு கம்பெனிங்க வேலைய பார்க்காம அடுத்தவங்க வாழ்க்கையில மூக்க நுழைக்கிறாங்க. இவங்களுக்கு யாரு அந்த உரிமை கொடுத்தது? இன்னொரு யூசர் சொல்லியிருக்காரு - சீன கல்யாண சட்டம் கல்யாணம் பண்ணவோ, பண்ணாம இருக்கவோ எங்களுக்கு உரிமை கொடுக்குது. இன்னொரு யூசர் கமெண்ட்ல சொல்லியிருக்காரு - எந்த கம்பெனியோட ரூல்ஸும் சட்டத்தையும், சமூகத்தையும் மீறி போகக்கூடாது.
சோசியல் மீடியா
சோசியல் மீடியால நிறைய பேரு விமர்சனம் பண்ணதால கம்பெனி அவங்க முடிவ மாத்திக்கிட்டாங்க. உள்ளூர்ல இருக்குற மனிதவள மற்றும் சமூக பாதுகாப்பு பணியகம் கம்பெனியோட நோட்டீஸ கேன்சல் பண்ணி இது தொழிலாளர் சட்டத்துக்கு எதிரானதுன்னு சொல்லி திட்டிட்டாங்க. அதுக்கப்புறம் கம்பெனி அவங்களோட புது ரூல்ஸ உடனே வாபஸ் வாங்க வேண்டியதா போச்சு.
கம்பெனி விளக்கம்
கம்பெனி அவங்க தரப்புல இருந்து சொல்லும்போது - நாங்க கல்யாணம் ஆகாத ஊழியர்கள கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க சொல்லி ஊக்கப்படுத்தத்தான் நினைச்சோம். ஊழியர்களோட தனிப்பட்ட வாழ்க்கையில தலையிடவோ, அவங்க மனச புண்படுத்தவோ நாங்க நினைக்கல. சீனாவோட மக்கள் தொகை குறைஞ்சுகிட்டே போறதால நிறைய நகரங்கள்ல கல்யாணம் பண்ணி நிறைய குழந்தை பெத்துக்க சொல்றாங்க. அதைத்தான் நாங்க சொல்றோம்" அப்படின்னு விளக்கம் கொடுத்து இருக்காங்க.
ஓயோ ரூம்ஸ் அதிகம் முன்பதிவு செய்யப்படும் நகரம் எது.? தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கா.?