ARTICLE AD BOX
1. கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் கரும் பச்சை நிறமான கீரை வகைகளையும் கேரட் போன்ற மஞ்சள் நிறமான காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. இந்த சமயத்தில் மகப்பேறு மருத்துவரிடம் அவர் சொல்லும் சமயத்தில் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளுதல் கூடாது. ஏனெனில் சில மருந்துகள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்குச் சேரும்.
3. கர்ப்ப காலத்தில் முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால் சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ள வேண்டும்.
4. கர்ப்பிணிப் பெண்கள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோ, பஸ்ஸில் கடைசி இருக்கை இவைகளில் பிரயாணம் செய்யக்கூடாது. மலைப் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது. விமானப் பயணம் தவிர்க்கப்பட வேண்டும்.
5. இந்த சமயத்தில் நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும். நல்ல இசையைக் கேட்க வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தைச் செல்வத்துக்கு அந்த நல்இசையைக் கேட்கும் சக்தி உண்டு.
6. சில பெண்களுக்கு குழந்தை உண்டாயிருக்கும் பொழுது, பாதங்களில் நீர் கோர்த்துக் கொண்டு தொல்லை கொடுப்பதுண்டு. இதற்கு எந்தவிதமான செலவுமின்றி கைகொடுக்க புழக்கடையில் மத மதவென்று வளர்ந்திருக்கும் குப்பை மேனி இலைகளைப் பறித்து நன்கு அலம்பி வாயில் போட்டுக் கொண்டு மென்று சாப்பிட்டு வாருங்கள். வீக்கமாவது ஒண்ணாவது!
7. சிலர் தலைச்சன் பிரசவத்துக்கு இருக்கும் பெண்களிடம், தாங்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்லி அதைரியப்படுத்தி விடுவார்கள். பிரசவம் என்றாலே கஷ்டம்தான். ஆனால், இப்படியா பயமுறுத்துவது? கர்ப்பிணிகளுக்கு இதமான, ஊக்கமான பேச்சுதான் இந்த சமயத்தில் தேவை.
8. கர்ப்பகால சமயத்தில் பத்து டம்ளர் நீர் ஒரு நாளைக்கு பருகுதல் மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
9. அது போல் இரண்டு கிளாஸ் பால் ஒரு நாளைக்கு அருந்த வேண்டும்.
10. தாய்மை அடைந்தவர்கள் மாம்பழம், பலாப்பழம், புளிப்பான எலுமிச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்களை உட்கொள்ளக் கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.
11. ஒரு பெண் கருவுறும்போது, மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கிறது. பற்களின் பாதுகாப்பு அப்போது முதலே ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் பெண்கள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும் இச்சத்து நிறைந்த பாலையும் பருகுவது அவசியம்.
12. குழந்தை பிறந்தவுடன் உங்கள் பாலைக் கொடுங்கள். ஏனென்றால் தாய்ப்பாலில் குழந்தையின் கண் பார்வைக்கு வேண்டிய வைட்டமின் 'ஏ' அபரிமிதமாக இருக்கிறது.