ARTICLE AD BOX
Annamalai on DK Shivakumar : நாடு முழுவதும் மத்திய அரசு விரைவில் செய்ய இருக்கும் தொகுதி மறுவரையறையை எதிர்த்து திமுக தமிழ்நாட்டில் மார்ச் 22 ஆம் தேதி தென்மாநில அளவிலான கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ள ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கும் திமுக, அந்த குழுவை கட்சியின் பிரதிநிதிகளாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பி இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு நேரில் அழைப்பு விடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதில் பங்கேற்க இயலாது என அம்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தாலும், துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக நடத்தும் மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டத்தில் டிகே சிவக்குமார் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
இந்த சூழலில் தான் அவர் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிகே சிவக்குமார் தமிழ்நாட்டுக்கு வந்தால் விவசாயிகள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து தமிழ்நாடு பாஜக மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என்றும் அறிவித்துள்ளார். ஏனென்றால் கர்நாடக மாநில துணை முதலமைச்சரான டிகே சிவக்குமார் கட்டாயம் காவரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கட்டாயம் அணை கட்டுவோம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும் மாநிலத்தின் சொந்த நிதியில் இருந்தே அங்கு அணை கட்ட கர்நாடகா தயாராக இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்,
ஆனால், காவிரியின் குறுக்கே மேகேதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அப்படியிருக்கையில் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ்சிக்கிற திட்டத்தை கர்நாடகாவில் செய்தே தீருவோம் என கூறி வரும் டிகே சிவக்குமாரை எப்படி தமிழ்நாட்டுக்குள் அனுமதிப்பீர்கள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திமுக மேகேதாது அணை குறித்து அவரிடம் ஏதாவது உறுதி வாங்கியிருக்கிறதா? அல்லது தமிழ்நாட்டுக்கு அழைக்கும்போது இந்த விவகாரத்தில் உறுதி கொடுத்த பின்னர் தான் வரவேண்டும் என உத்தரவாதம் வாங்கியிருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டிகே சிவக்குமார் தமிழ்நாட்டுக்கு வந்தால் நிச்சயம் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என கூறியிருக்கும் அண்ணாமலை, அவர் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். டெல்டா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் திமுகவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, டிகே சிவக்குமார் தமிழ்நாட்டுக்கு வரும்போது அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு பாஜக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ