ARTICLE AD BOX
பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் பாரம்பரிய முறையில் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் திருமணம் நடைபெற்றது.
பாஜகவின் மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, மத்திய அமைச்சர்கள் வி. சோமண்ணா, அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட தலைவர்கள், பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தேஜஸ்வி சூர்யா 2019 ,2024 ஆம் ஆண்டில் பெங்களூரு தெற்கு தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். பி.டெக் பட்டதாரியான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் இவர்களின் திருமண புகைப்படம் வெளியான நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
With the blessings of Gurus, elders, and well wishers, married @ArtSivasri today as per vedic traditions.
We seek your blessings and wishes as we start this journey together! pic.twitter.com/sguSVBRyJg