கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

5 hours ago
ARTICLE AD BOX

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற கடன் மற்றும் மாதத் தவணைத் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வேலை இழப்பு, ஊதியம் குறைப்பு, வேலையின்மை ஆகியவற்றின் காரணமாக வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால் வட்டியை தள்ளுபடி செய்ய வங்கிகள் மறுத்துவிட்டன. அதேவேளையில் மாதத் தவணைகளை செலுத்த காலஅவகாசம் வழங்கப்பட்டது. சில வங்கிகளில் வட்டிக்கு வட்டி என அதிக வட்டி வசூலித்தாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், கரோனா காலத்தில் அதிக வட்டி விதித்ததாக தனியாா் வங்கிக்கு எதிராக சாந்தி குமாரி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, கரோனா காலத்தில் அதிக வட்டி விதித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை 4 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என இந்திய ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article