கரூர்: அரசுப் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 5 பேர் உயிரிழப்பு

1 day ago
ARTICLE AD BOX

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இன்று அதிகாலையில் கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன், ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் குளித்தலை அருகே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த அரசுப் பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்துக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் செல்வராஜ், அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் மற்றும் கார் டிரைவர் விஷ்ணு என தெரிய வந்துள்ளது.

காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 பேரின் உடல்களை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இதையடுத்து அவர்கள் 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Read Entire Article