ARTICLE AD BOX
கரிசலாங்கண்ணி என்னும் அற்புத மூலிகை..!! இதன் மகத்துவத்தைப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நமது முன்னோர்களின் காலத்தில் இருந்தே இந்த கரிசலாங்கண்ணியில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நமக்கு கூறியுள்ளனர். இருப்பினும் இந்த காலகட்டத்தில் பலருக்கும் தெரியாத ஒன்றுதான் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
கரிசலாங்கண்ணி ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.
நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் வெட்டு காயம் போன்றவற்றிற்கு இந்த கரிசலாங்கண்ணி இலையை எடுத்து அரைத்து அதில் வரும் சாற்றை தடவுவதன் மூலம் நல்ல பலனை பெற முடியும். நீண்ட நாட்களாக இருக்கும் தழும்பை கூட இவ்வாறு செய்வதன் மூலம் தழும்பு நாளடைவில் மறைந்து விடும். கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலை இரண்டையும் சமமாக எடுத்து அவற்றை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து 50மில்லி பசும்பாலில் கலந்து தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்தால் மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த முடியும். குறிப்பாக இதை குடிக்கும் போது மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் பத்தியம் இருக்க வேண்டும். கரிசலாங்கண்ணி சாற்றை சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கிவிடும். தலை முடி பிரச்சனைக்கு இந்த கரிசலாங்கண்ணி சிறந்த தீர்வாக இருக்கிறது.