கராச்சியில் ஆப்கன் முகாமில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

5 hours ago
ARTICLE AD BOX

கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தானின் கராச்சியின் புறநகரில் உள்ள ஆப்கானிஸ்தான் முகாமில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியானார்கள்.

கூரை இடிந்து விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பம் கைபர் பக்துன்க்வாவின் பன்னுவைச் சேர்ந்தது. சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

இதற்கிடையில், பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இல்லையெனில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 80,000க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இருப்பினும், சுமார் 3 மில்லியன் ஆப்கானியர்கள் இன்னும் பாகிஸ்தானில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Read Entire Article