ARTICLE AD BOX
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்க உள்ளது. அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஜாம்பவான் எம்எஸ் தோனி விளையாடுவது ரசிகர்களிடம் வழக்கமான எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றுள்ளார்.
மேலும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள தோனி வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். தற்போது 43 வயதாகும் அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து சாதாரண கீப்பராக விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போதுள்ள அனைத்து கேப்டன்களும் எதிரணியின் பலம், பலவீனத்தை கணினி உதவியுடன் கணக்கிட்டு கேப்டன்ஷிப் செய்வதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
தல தோனி வழி:
ஆனால் எம்எஸ் தோனி கம்ப்யூட்டரை ஏற்றுக்கொள்ளாமல் தமது வழியில் அணியை வழி நடத்துவார் என்றும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். அப்படி இயற்கையாக அணியை தலைமை தாங்கும் பண்புகளைக் கொண்ட தோனி இப்போதும் சென்னை அணியை வழி நடத்துதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி எனும் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்”
“அவர் கணினி என்ன பரிந்துரை செய்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார். தனது கால்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் கைகளுக்கு கை உறைகளையும் அணிந்துக் கொண்டு களத்திற்கு சென்று பஜ்ஜு பா (ஹர்பஜன்) நீங்கள் அங்கே சென்று நில்லுங்கள், தீபக் (சஹர்) அங்கே சென்று நில்லுங்கள் என்று வழிமுறைகளை சொல்வார். அவருக்கு அடுத்த பவுலர் யார் என்பது தெரியும்”
கம்பியூட்டரை மிஞ்சும் கேப்டன்ஷிப்:
“எப்போது எந்த சமயத்தில் எந்த பவுலரை பயன்படுத்த வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். அணியை வழி நடத்துவதில் அவர் சிறந்த கேப்டன் என்று நினைக்கிறேன். சிஎஸ்கே போன்ற மிகப்பெரிய அணியை தோனி எனும் ஒரு நபரால் வெற்றிகரமாக நடத்த முடிகிறது. அவருக்கு கம்ப்யூட்டர் தேவையில்லை. அவர் கம்ப்யூட்டரை மிஞ்சியவர்”
இதையும் படிங்க: பாகிஸ்தான் மெய்ச்சுக்குற அளவுக்கு.. உண்மையிலேயே அதுல பெஸ்ட் கிடையாது.. மொய்ன் அலி ஓப்பன்டாக்
“வேண்டுமானால் கம்ப்யூட்டரை பின்பற்றும் அணிகள் மற்றும் அதை பின்பற்றாத அணிகளின் வித்தியாசத்தை பாருங்கள்” என்று கூறினார். அந்த வகையில் சிறந்த கேப்டனாக கருதப்படும் தோனி இம்முறை கோப்பையை வென்று வெற்றிகரமாக விடைபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். இந்த வருடம் சென்னை தங்களது முதல் போட்டியில் மும்பையை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
The post கம்பியூட்டரை மிஞ்சிய கேப்டன் தோனி.. தனியாளா சிஎஸ்கே அணிக்காக இதை செய்றாரு.. ஹர்பஜன் பேட்டி appeared first on Cric Tamil.