ARTICLE AD BOX
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்கள் மீது கவனம் திரும்பி உள்ளது. போரில் ஈடுபட்டுவரும் உக்ரைனுக்கு செய்யப்படும் நிதியுதவிக்கு பதிலாக, அங்குள்ள கனிம வளங்களை வழங்க வேண்டும் என ட்ரம்ப் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், கனிம வள விநியோகம் குறித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தங்கள் நாட்டின் கனிம வளங்களை முற்றிலுமாக வழங்கப்போவதில்லை எனக்கூறிய அவர், இருதரப்பும் பயன்பெறும் வகையில் ஒரு வாய்ப்பை மட்டுமே இதன்மூலம் வழங்குவதற்கு தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து அதிபர் ட்ரம்புடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.