ARTICLE AD BOX
கத்துறதுதான் ஃபேன் பாய் சம்பவமா?.. ஒஜியை 7ஜி வச்சு கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்.. பாவம் ஆதிக்!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடலான ஓ ஜி சம்பவம் தற்போது வெளியாகி அஜித்குமார் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் பர்ஸ்ட் சிங்கிளில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து அவரும் பாடியுள்ளார்.
நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் பாடலில் நடுநடுவே வந்து ஆதிக் ரவிச்சந்திரன் கத்துவது எல்லாம் ஃபேன் பாய் சம்பவமா என விஜய் ரசிகர்கள் 7ஜி ரெயின்போ காலனி பாடல் காட்சியை வைத்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

விஜய் படத்தின் அப்டேட் வந்தால் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்வது, அஜித் படத்தின் அப்டேட் வந்தால் விஜய் ரசிகர்கள் பதிலுக்கு கலாய்ப்பது என்பது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று வெளியாகி உள்ள குட் பேட் அக்லி படத்தின் பாடலை அதிகம் ட்ரோல் செய்ய முடியாது நிலையில், அதற்கு பதிலாக அந்த படத்தின் இயக்குநரை கலாய்த்து வருகின்றனர்.
ஓஜி சம்பவம்: கேங்ஸ்டர் என்கிற வார்த்தை தமிழ் சினிமாவில் மலையேறி விட்ட நிலையில், அடுத்ததாக தற்போது வரும் நடிகர்கள் எல்லாம் ஒரிஜினல் கேங்ஸ்டர் ஓஜியாக தங்களை மாற்றிக் கொள்கின்றனர். அஜித் குமார் ஏகப்பட்ட படங்களில் கேங்ஸ்டராக நடித்து விட்ட நிலையில், ஓஜியாக தற்போது குட் பேட் அக்லி படத்தில் மாறியுள்ளார். நல்ல கருத்துக்களைக் கொண்ட படங்களை வலிமை, விடாமுயற்சி என அஜித் குமார் கொடுத்தால் அவரது ரசிகர்கள் கூட போர் அடிக்குது என படத்தை பெரிதாக ஓட விடாமல் செய்து வரும் நிலையில், எவ்வளவு நாள் நானும் நல்லவனாகவே நடிக்கிறது என்பது போல மங்காத்தா ஸ்டைலில் நெகடிவ் ஷேடில் வெறித்தனம் காட்ட காத்திருக்கிறார்.
7ஜி சம்பவம்: செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தில் காலனியில் நடைபெறும் விழாவில் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலை பாடும் காட்சி ஆல் டைம் காமெடி சீன். அந்த சீனை வைத்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் விஜய் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்துருகின்றனர்.
கத்துவது தான் ஃபேன் பாயா?: ஏகே என திடீர் திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் மைக்கையே கடித்து முழுங்கி விடுவார் போல அந்த அளவுக்கு கத்துகிறார். இப்படி கத்துவது தான் ஃபேன் பாய் சம்பவமா என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அனிருத்தை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். ஆலுமா டோலுமா அளவுக்கு ஒரு அல்டிமேட் ஆன பாடல் குட்பேக் அக்னி படத்தில் அமையவில்லையே என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பிஜிஎம்மையாவது ஜி.வி .பிரகாஷ் சிறப்பாக செய்யவில்லை என்றால் அவ்வளவுதான் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
படம் தாறுமாறாக இருக்கும்: ஆதிக் ரவிச்சந்திரன் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளது. ஏப்ரல் 10ம் தேதி கண்டிப்பாக படம் தாறுமாறாக வெளியாகி அஜித் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் தியேட்டர்களுக்கு வரவழைக்கும். சோலோவாக ஒட்டுமொத்த தியேட்டர்களிலும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வேட்டையும் நடத்தும் என்கின்றனர்.