ARTICLE AD BOX
திருத்தணி அருகே ராணுவ வீரர் மனைவி கள்ளக்காதலுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி.திருவள்ளூர் மாவட்டம் ,திருத்தணி வட்டம் ,கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் முன்னாள் ராணுவ வீரரான வெங்கடேசன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 -வயதில் ஒரு பெண் குழந்தையும் 7- வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் சந்தியா பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும் தற்பொழுது தோமூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவருக்கும் தனது மனைவி சந்தியாவிற்கும் தொடர்பு இருப்பதாக வெங்கடேஷனுக்கு தெரிய வந்துள்ளது.
அதனை முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் பலமுறை தனது மனைவி சந்தியாவை கண்டித்துள்ளார். அதை ஏற்றுக் கொள்ளாத சந்தியா தனது அண்ணனான சண்முகம் இடம் தனது கணவர் வெங்கடேசன் தன்னை அடித்து துன்புறுத்தி கொடுமை படுத்துவதாக தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் தனது நண்பரான லோகேஷ் இடம் தெரிவித்துள்ளார்.
அதனை லோகேஷ் அவரது நண்பரான சதீஷ் மற்றும் அவரது தம்பி பிரசாந்த் ஆகியோரிடம் தெரிவித்தாா். இந்த நிலையில் சதீஷ் சென்னையில் கூலிப்படையை சேர்ந்த ஸ்ரீராம், யோகேஸ்வரன், மணிகண்டன், ஆகியோர்களிடம் பணத்தை கொடுத்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரரான வெங்கடேசன் இரவில் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளாா். அப்பொழுது திட்டம் தீட்டிய மனைவி, கூலிப்படையை அங்கு அனுப்பி சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரரை கார் ஏற்றி கொலை செய்ய முயற்ச்சித்துள்ளனர். அவர் சாகாததால் இரும்புராடால் அடித்து மற்றும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
வாகனம் மோதி இறந்து விட்டதாக முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசனின் இறப்பை விபத்து என்று திருவாலங்காடு போலீசார் பதிவு செய்தனர். பின்னர் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனை அனுப்பிவைத்தனர். பரிசோதனையின் அறிக்கையில் கொலை என்று தெரிந்தவுடன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் சென்னையில் வேறு வழக்கில் சிக்கியவர்கள் விபத்து போல் ராணுவ வீரரை ஒருவரை கொலை செய்த சம்பவத்தை சென்னை போலீஸ் இடம் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாகத்தான் இந்த வழக்கில் வேகம் எடுத்த போலீசார் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தனது கணவருக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி சந்தியாவை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதற்கு நடுவில் கொலை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று திருவாலங்காடு காவல் நிலையத்தையும் முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் மேற்கொண்ட சம்பவமும் நடைபெற்றது. இந்த கொலை வழக்கில் திருவாலங்காடு போலீசார் இதுவரை இந்த கொலை வழக்கில் 1)சந்தியா,2) லோகேஷ், 3) சண்முகம் ஆகியோரை கைது செய்து கொலை நடந்தது எப்படி என்று கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை சேர்ந்த குற்றவாளிகளையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
கணவருக்கு மயக்க மருந்து… பெற்ற மகள்களை பாலியலுக்கு தள்ளிய தாய்!