'கண்ணப்பா' படத்தில் அது மிகப்பெரிய சவாலாக இருந்தது- விஷ்ணு மஞ்சு

6 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானநிலையில், அடுத்ததாக அனைவரின் கவனமும் டிரெய்லர் மீது உள்ளது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் டிரெய்லர் குறித்து விஷ்ணு மஞ்சு பேசினார். அவர் பேசுகையில், 'கண்ணப்பா பட டிரெய்லர் 2 மாதங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், பல பெரிய நட்சத்திரங்கள் இருப்பதால் அதை தயார் செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது' என்றார்.

Read Entire Article