“கணவர் எழுதிய ஒரே கடிதம்…” 80 ஆண்டுகளாக காத்திருந்த மூதாட்டி…. கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை….!!

11 hours ago
ARTICLE AD BOX

சீனாவை சேர்ந்த து ஹுசென் என்ற மூதாட்டி தனது கணவர் எழுதிய ஒரு கடிதத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவருக்காக 80 வருடங்களாக காத்துக் கொண்டிருந்தார். 103 வயதான மூதாட்டி இன்று உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். மகன் பிறந்த பிறகு து ஹுசெனின் கணவர் ராணுவத்திற்கு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் து ஹுசென் பல வருடங்களாக தனது கணவரை தேடி வந்தார்.

அந்த சமயம் து ஹுசெனை திருமணம் செய்து கொள்ள பல பேர் முன் வந்தனர். ஆனாலும் கணவரை வருவார் என்ற நம்பிக்கையுடன் து ஹுசென் அவருக்காக காத்துக் கொண்டிருந்தார். இன்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற கணவரையோ அல்லது அவர்களின் உடைமைகளையோ மீட்போம் என பேர குழந்தைகள் கூறியுள்ளனர்.

Read Entire Article