ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நட்சத்திர தம்பதிகளாக இன்று வரை வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், பேரழகன் என பல படங்களில் ஜோடியாக நடித்து கடைசியில் வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்தனர்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா கொஞ்ச நாள்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட ஸ்டேஜுக்கு பிறகு மீண்டும் ரி எண்ட்ரி கொடுத்தார். 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார் ஜோதிகா. இந்தப் படம் ஜோதிகாவிற்கு ஒரு முக்கியமான படமாகவும் அமைந்தது.
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி இருந்ததனால் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து காற்றின் மொழி, ராட்சசி என பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலேயே நடித்து செகண்ட் இன்னிங்ஸிலும் கோல் அடித்தார் ஜோதிகா. இந்த நிலையில் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலான ஜோதிகா ஹிந்தியில் தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட ஒரு வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். அந்த சீரிஸின் புரோமோஷனில் கலந்து கொண்ட போது ஜோதிகா பேசிய ஒரு பேச்சு பெரிய சர்ச்சையாக மாறியது. அதாவது தமிழில் நடிகைகளை வெறுமனே நடிகர்களுடன் டூயட் ஆடுவதுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஹிந்தியில் அப்படி இல்லை என்பது போல பேசினார். அப்படி பார்த்தால் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியாது.
திரிஷாவும் இன்று இந்தளவு ஒரு இடத்தை அடைந்திருக்க முடியாது. ஏன் ஜோதிகாவே பெண்களை மையப்படுத்தி வெளிவந்த படங்களில் நடித்ததனால்தான் மீண்டும் அவரை மக்கள் நல்ல முறையில் வரவேற்றனர். அப்படி இருக்கும் போது ஏன் இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை.சமீபகாலமாக ஜோதிகா ஒரு விரக்தியில் பேசுவதாக வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.
ஏன் கங்குவா பட தோல்வியின் போது கூட சூர்யாவை திட்டமிட்டே அனைவரும் விமர்சிக்கின்றனர் என்று ஜோதிகா கூறினார். ஆனால் இன்று வரை அந்தப் படம் தோல்வி படம் என அவரது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதே ரெட்ரோ படம் ரிலீஸாகி அந்தப் படம் மாபெரும் ஹிட்டானால் தான் பேசிய எல்லாவற்றையும் ஜோதிகா வாபஸ் வாங்குவாரா என்று வலைபேச்சு அந்தணன் கூறினார்.