ARTICLE AD BOX

உயில் என்பது குறிப்பிட்ட ஒரு நபர் இறந்த பிறகு தன்னுடைய சொத்துக்கள் எப்படி குடும்பத்தினருக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட அனுமதிக்கும் ஒரு சட்ட ஆவணம். மேலும் இந்தியாவில் ஒரு உயில் பதிவு செய்யப்படாமலேயே சட்டபூர்வமாக செல்லுபடி ஆகும். இருப்பினும் அதை முறையாக பதிவு செய்வது கூடுதல் பாதுகாப்பு கொடுக்கும். இந்த உயில் எழுதுவதற்கு ஒரு நபர் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் உயிலை எழுத முடியாது. செல்லுபடி ஆகும் ஒரு உயிலின் முக்கிய அம்சங்களாக உயில் எழுதுபவருடைய மனநிலை, அவருடைய முழுமையான விவரங்கள், சொத்து பட்டியல், சொத்துக்கள் மூலம் பயனடைவோரின் பெயர்கள், உயிலை நிறைவேற்றுவோரின் குறிப்பு மற்றும் சாட்சி கையொப்பம் ஆகிய விவரம் அவசியம்.
மேலும் இந்தியாவில் ஒரு உயிலை பதிவு செய்ய வேண்டும் என்றால் முதலில் உரிய விவரத்தோடு அந்த உயிலை எழுத வேண்டும். அதன் பிறகு சாட்சிகளை தேர்ந்தெடுத்து துணை பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று அடையாள சான்று ஆவணங்களை கொடுக்க வேண்டும். பின்னர் உயிலுக்கான பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். இதனை அடுத்து தங்களுடைய உயிலை பதிவு செய்து கொள்ளலாம். கடைசியாக பதிவு செய்யப்பட்ட உயிலின் நகல் வழங்கப்படும் அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் சரி செய்து கொள்ளலாம் அல்லது உயிரே ரத்து செய்தல் போன்ற திட்டங்களையும் மேற்கொள்ளலாம்