ARTICLE AD BOX
ஊட்டி : ஊட்டி அருகே புதுமந்து பகுதியில் கடையை உடைத்து உள்ளே சென்ற கரடி பேக்கரி பொருட்களை சூறையாடிச் சென்றது.நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
காட்டு யானை, கரடி, சிறுத்தை, புலி மற்றும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் இவைகள் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிக்கு வருவதால் அடிக்கடி மனித விளங்கும்போது ஏற்பட்டு வருகிறது.
மேலும் மக்கள் வாழும் பகுதிக்குள் வரும் கரடிகள் இவைகள் வீடுகள், கடைகள் மற்றும் கோயில்களை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடி செல்கின்றன. மாவட்ட முழுவதும் இது போன்ற பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர்.ஊட்டி அருகே புதுமந்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியை உடைத்து உள்ளே சென்ற கரடி அங்குள்ள உணவு பொருட்களை சூறையாடிச் சென்றுள்ளது.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் இதுபோன்று கரடி கடை உடைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உள்ளாக்கி உள்ளது. எனவே புதுமந்து பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்து வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடிய கரடி appeared first on Dinakaran.