ARTICLE AD BOX
கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் த்ரில் வெற்றி.. பாகிஸ்தான் போலவே இங்கிலாந்தும் வெளியேற்றம்..!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. இதன் விளைவாக, பாகிஸ்தானைப் போலவே அந்த அணியும் வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹீம் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இதனை அடுத்து, 326 என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
அந்த அணியின் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 120 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால், அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.
ஆப்கானிஸ்தான் அணி தற்போது இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva