ARTICLE AD BOX
சென்னை நீலாங்கரை கடற்கரையில், நண்பனை கடல் அலை இழுத்துச் சென்று விட்டதாக கூறி, போதையில் காவல் துறையினரை இளைஞர் அலைக்கழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த லட்சுமணனும், சாய் விக்னேஷூம் மது அருந்திவிட்டு அதிகாலையில், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரைக்கு வந்துள்ளனர். பின்னர், அங்கேயே போதை தலைக்கேறி மயங்கி கிடந்துள்ளனர்.
போதை தெளிந்த எழுந்த சாய் விக்னேஷ், லட்சுமணனை காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, நண்பனை கடல் அலை இழுத்துச்சென்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து, தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில், லட்சுமணனின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டபோது, அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர், சாய் விக்னேஷையும், லட்சுமணனையும் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்துமாறு, அவர்களது குடும்பத்தினரை அறிவுறுத்தியுள்ளனர்.