கடலூரில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் கொல்லப்பட்டது கண்டுபிடிப்பு..!!

2 hours ago
ARTICLE AD BOX

கடலூர்: கடலூரில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே எம்.புதூர் மற்றும் டி.புதூர் கிராமங்கள் உள்ளது. எம்.புதூர் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவரும் டி.புதூர் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் என்பவரும் காணவில்லை என கடந்த ஜனவரி மாதம் இறுதியில் அற்புதராஜ் பெற்றோர்களும், பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சரண்ராஜ் பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கடந்த 20 நாட்களாக துப்பு கிடைக்காத நிலையில் அவர்களது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நண்பர்கள் 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது அதில் 2 பேரை கொன்று புதைத்திருப்பது தெரியவந்தது.

நெய்வேலி அருகே உள்ள என்.எல்.சி சுரங்கம் உமங்கலம் என்ற பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது புதூர் மாவட்ட காவல் காணப்பணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் தற்போது இருவரின் உடலும் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அவர்கள் உடல்கள் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

 

The post கடலூரில் அடுத்தடுத்து காணாமல் போன இளைஞர்கள் கொல்லப்பட்டது கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article