ARTICLE AD BOX
கடகம், சிம்மம், கன்னி பண வரவு அதிகரிக்கும்.. அதிர்ஷ்டம் தரும் வார ராசி பலன்
Weekly rasi palan: 2025 மார்ச் 24 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை மாசி மாதம் 12 ஆம் நாள் முதல் மாசி 18 வரை கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன விதமான நற்பலன்கள் கிடைக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வாரத்தில் மிக முக்கிய தினமான மகா சிவாரத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமானுக்குரிய தினமான மகா சிவராத்திரி தினத்தன்று ஒரு கால பூஜையிலாவது அமர்ந்து மனதார வழிபடுவது ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கும். பழங்கள், மலர்கள், வில்வ இலை, தாமரை என தங்களால் முடிந்தவற்றை சிவனுக்கு சாற்றி வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும்.

கடகம்: கடகம் ராசிக்கு உங்கள் குழந்தைகளின் சுப காரிய தடைகள் நீங்கும். கல்வி, வேலை வாய்ப்பில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையுடன் ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. பயணத்தில் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம்.
வார்த்தைகளில் கவனமாக செயல்பட்டால் ஆச்சர்யமான முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால பிரச்னைகள் விலகும். உத்யோகத்தில் மேல் அதிகாரியுடன் கவனம் தேவை. அரசுத்துறை, அரசியல் வாதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் படபடப்பு இருந்து கொண்டே இருக்கும். நரம்பு, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கால் பகுதியில் அடிபடுவது போன்ற ஆபத்து உள்ளது. சிவன் கோயிலில் அபிஷேகம் செய்ய உதவுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்: சிம்மம் ராசிக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தாய், தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் கல்வி, உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை குறைந்து நிம்மதி பிறக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும்.
பழைய பாக்கி வசூலாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. வாழ்க்கை துணை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கால் மற்றும் கழுத்து பகுதியில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்து செல்லும். அரசு, அரசியல்வாதிகள், கலை, ஊடகத்துறையினருக்கு ஏற்றம் உண்டு.
கன்னி: கன்னி ராசிக்கு நல்ல ஏற்றம் உண்டு. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். அரசு, அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும். கௌரவத்தை இழப்பது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.
கை, கால் வலி, தோல் ஒவ்வாமை, சுவாச பிரச்னைகள் ஏற்படும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். உத்யோகத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குரு பெயர்ச்சி நிகழவுள்ளதால் உத்யோகம், தொழில், கல்வி ஆகியவற்றில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதால் நன்மை பிறக்கும்.
- சீனாவிடமிருந்து வந்த நல்ல செய்தி.. இனி தங்கம் விலை "இப்படி" தான்! ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜகவைச் சேர்ந்த அலிசா அப்துல்லா விடுத்த பரபரப்பு சவால்
- இந்திரஜா குழந்தையை பார்க்காத காரணம் இதுதான்! இந்த இடத்தில் இருந்து மாறிட்டாங்க.. போஸ் வெங்கட் ஓபன்
- ஒரே நடிகையை காதலித்த 3 நடிகர்கள்.. அவரை திருமணம் செய்ய போயி.. மச்சக்கார ஹீரோ.. இப்படியுமா கிசுகிசு?
- இந்தியாவிடம் மண்டியிட்ட வங்கதேசம்.. ஷேக் ஹசீனா போட்ட போடால் கதறும் முகமது யூனுஸ்.. என்ன நடந்தது?
- இப்படியா அசிங்கப்படுத்துவீங்க? புகழால் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறிய சௌந்தர்யா
- நிலம், வீடு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி.. கிரைய பத்திரம், பட்டா வேணுமா? இந்த தேதியை நோட் பண்ணுங்க
- மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. வீடுகளில் மின் கட்டணம் மாறுது.. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு ஒப்புதல்
- வங்கதேசத்தால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தான் போட்டியில் சிக்கல் இருக்காது.. அது எப்படி?
- கமலுக்காக தான் அந்த முடிவு எடுத்தேன்.. எங்கள் பிரிவு விதி அல்ல..! ட்ரெண்டாகும் ஸ்ரீவித்யாவின் பேட்டி
- முட்டுக்கட்டையா போடுறீங்க? அமெரிக்காவை கழற்றிவிடும் இந்தியா? ரஷ்யாவுடன் சேர்ந்து செய்யும் சம்பவம்
- ஈரோட்டு தோட்டத்தில் இருட்டில் நடமாடிய 3 உருவங்கள்.. 19 வயது பெண்ணால் ஆடிப்போன கோபி.. காதலன் நிலைமை?