ஓவர் நைட்டில் ஒபாமா.... திரிஷாக்கு அடிச்ச லக்! எப்படி கதாநாயகி ஆனாருன்னு பாருங்க..!

6 hours ago
ARTICLE AD BOX

நடிகை திரிஷா தமிழ்த்திரை உலகில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர். அவருக்கு ஆரம்பத்தில் சில படங்கள் சொதப்பினாலும் அதன்பிறகு நல்ல பிக்கப் ஆனார். 1999ல் ஜோடி என்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

சாமி: ஆரம்பத்தில் மௌனம் பேசியதே, மனசெல்லாம், லேசா லேசா என சில படங்களில் நடித்த திரிஷாவின் மார்க்கெட் 2003ல் ஹரி இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த சாமி படத்தில் இருந்து தான் பிக்கப் ஆனது.

விஜய் உடன் அவர் நடித்த கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ, கோட்னு பல படங்களில் நடித்துள்ளார். எல்லாமே சூப்பர்ஹிட்தான். அவர்களுக்குள் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது.

விண்ணைத் தாண்டி வருவாயா: ரஜினியுடன் பேட்ட, கமலுடன் மன்மதன் அம்பு, விக்ரமுடன் சாமி, பீமா, பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்து அசத்தி விட்டார். சிம்புவுடன் இவர் இணைந்து நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தனுஷ் உடன் இணைந்து கொடி படத்தில் நடித்தார்.


நடிக்க வந்த கதை: இப்படி இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இவர் நடிக்க வந்த கதை தான் ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது. இதுகுறித்து நடிகர் ராதாரவி என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஒரு படத்தில் சின்ன கேரக்டரில் தான் நடிக்கக் கலந்து கொண்டார் திரிஷா. ஆனால் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை சூட்டிங்ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வரவில்லை. அதனால் இயக்குனர் வந்திருந்த நடிகைகளில் திரிஷா நன்றாக இருக்கிறார் என்று தான் அவரை நடிக்க வைக்க செலக்ட் செய்து இருந்தார்.

ஓவர் நைட்டில் ஒபாமா: பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்களே ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்று. அதுபோல தான் திரிஷா வாழ்க்கை மாறியது. இன்று திரிஷா தன்னுடைய திறமையால் எத்தனையோ ஹிட் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பாராத விதத்தில்தான் சினிமாவில் கதாநாயகி ஆனார் என்கிறார் நடிகர் ராதாரவி. 

Read Entire Article