ARTICLE AD BOX

Atlee: ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவர் அட்லி. எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக மாறினார். ஏற்கனவே தமிழில் வெளிவந்த பழைய படங்களின் கதையை பட்டி டிங்கரிங் செய்து படமெடுப்பதுதான் இவரின் ஸ்டைல். கேட்டால் ‘என்னை பற்றி தவறாக பேசுபவன் பேசட்டும். நான் என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன்’ என தத்துவம் சொல்வார்.
விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். எனவே, இவரை பாலிவுட்டுக்கு அழைத்த ஷாருக்கான் அட்லியின் இயக்கத்தில் ஜவான் என்கிற படத்தை தயாரித்து நடித்தார். இந்த படம் 1300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைக்க பாலிவுட்டிலும் அட்லிக்கு மவுசு ஏறியது.

2023 செப்டம்பர் மாதம் இப்படம் வெளியானது. படம் வெளியாகி 18 மாதங்களாகியும் அட்லியின் அடுத்த படம் அறிவிப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அட்லியின் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கிறார். அதில், கமல் கேமியோ செய்கிறார். கமல் மறுத்துவிட ரஜினி கேமியோ செய்கிறார் என செய்திகள் வெளியாகி வந்தது.
அதன்பின் சல்மான்கான் இல்லை.. புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்க அட்லி இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக சொன்னார்கள். ஆனால், அட்லி கொடுத்த பட்ஜெட்டில் ஆடிப்போய்விட்டது சன் பிக்சர்ஸ். தனக்கு மட்டுமே 100 கோடி சம்பளம் வேண்டும் என அட்லி கேட்டதாக சொல்லப்பட்டது. ‘ஆளவிடு சாமி’ என சன் பிக்சர்ஸ் எஸ்கேப் ஆகிவிட்டது. ஒருபக்கம் அல்லு அர்ஜூனும் 250 கோடிக்கும் மேல் சம்பளம் கேட்கிறார்.
‘சன் பிக்சர்ஸ் போனா போகட்டும்.. நம்மாலு இருக்காரு’ என அல்லு ஆர்ஜூன் தில் ராஜுவை அணுக அட்லி கேட்ட சம்பளத்தையும், பட்ஜெட்டையும் கேட்டு முடியாது என கை விரித்துவிட்டார் தில் ராஜூ. ஏற்கனவே, அட்லியின் குரு ஷங்கரை வைத்து கேம் சேஞ்சர் படம் எடுத்து 150 கோடி நஷ்டமான சோகத்தில் இருக்கிறார் அவர்.

தில் ராஜு எஸ்கேப் ஆகிவிட அல்லு அர்ஜூனின் சொந்த நிறுவனமே இப்படத்தை தயாரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது அந்த நிறுவனமும் மறுத்துவிட்டது. 55 கோடி சம்பளம், லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு, அதிக பட்ஜெட் என அட்லி சொல்ல எல்லோரும் தெறித்து ஓடுகிறார்களாம். எனவே, யாருமே இல்லாத கடையில் டீ ஆத்திக் கொண்டிருக்கிறார் அட்லி.