ஓய்வுக்கு பின்னும் தொடரும் அதிரடி: சதம் விளாசிய டிவில்லியர்ஸ்.! 28 பந்துகளில் 15 சிக்சர்

12 hours ago
ARTICLE AD BOX

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவில், நன்கொடை திரட்டுவதற்காக நடந்த உள்ளூர் அணிகள் இடையிலான போட்டியில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ், 28 பந்துகளில் 15 சிக்சர்களுடன் சதமடித்து சாதனை படைத்தார். தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ், கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், தென் ஆப்ரிக்காவின் செஞ்சுரியன் நகரில் நேற்று முன்தினம் நடந்த, நன்கொடை திரட்டும் போட்டி ஒன்றில் டைட்டன்ஸ் லெஜண்ட்ஸ் அணிக்காக பங்கேற்றார்.

புல்ஸ் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்த அந்த போட்டியில் டிவில்லியர்ஸ் வெறும் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 15 சிக்சர்களை விளாசினார்.101 ரன் குவித்து அவுட்டான அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் சிக்சர்களாக விளாசியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. 20 ஓவர் முடிவில் அவரது அணி 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய புல்ஸ் லெஜண்ட் அணி 8 விக்கெட் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், டிவில்லியர்ஸின் ஸ்டிரைக் ரேட், 360. பேட்டிங்கின்போது, எல்லா திசைகளிலும் பந்துகளை விளாசித் தள்ளும் வல்லமை படைத்தவர் என்பதை குறிப்பிடும் வகையில் டிவில்லியர்சுக்கு மிஸ்டர் 360 என்ற செல்லப் பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஓய்வுக்கு பின்னும் தொடரும் அதிரடி: சதம் விளாசிய டிவில்லியர்ஸ்.! 28 பந்துகளில் 15 சிக்சர் appeared first on Dinakaran.

Read Entire Article