ARTICLE AD BOX
இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய சீனியர் ஆண்கள் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், ஃபிபா அணியில் சுனில் சேத்ரி உள்பட 26 பேர் கொண்ட தனது அணியை அறிவித்தார்.
சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் சேத்ரி, 94 கோல்கள் அடித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்திய அணியில் மீண்டும் களமிறங்க உள்ளார்.
இந்த மாதம் நடைபெறவுள்ள ஃபிபா நட்புறவு போட்டிக்கான இந்திய அணியில் கலந்துகொண்டு விளையாடுவதற்காக சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுவிட்டதாக தேசிய கால்பந்து உச்ச அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய அணி
கோல்கீப்பர்கள்
அம்ரிந்தர் சிங், குர்மீத் சிங், விஷால் கைத்.
டிஃபெண்டர்கள்
ஆசிஷ் ராய், போரிஸ் சிங் தங்கஜாம், சிங்லென்சனா சிங் கோன்ஷாம், ஹ்மிங்தன்மாவியா, மெஹ்தாப் சிங், ராகுல் பெகே, ரோஷன் சிங், சந்தேஷ் ஜிங்கன், சுபாசிஷ் போஸ்.
மிட்ஃபீல்டர்கள்
ஆஷிக் குருனியன், ஆயுஷ் தேவ் செத்ரி, பிராண்டன் பெர்னாண்டஸ், பிரிசன் பெர்னாண்டஸ், ஜீக்சன் சிங் தௌனோஜாம், லாலெங்மாவியா, லிஸ்டன் கோலாகோ, மகேஷ் சிங் நௌரெம், சுரேஷ் சிங் வாங்ஜாம்.
முன்கள வீரர்கள்
சுனில் சேத்ரி, ஃபரூக் சௌத்ரி, இர்பான் யாத்வாட், லல்லியன்சுவாலா சாங்டே, மன்வீர் சிங்.