ஓம் நமச்சிவாயா.. 'நிலவுக்கு என் மேல் என்னடி காதல்' ரிலீஸ் குறித்து தனுஷ்..!

2 days ago
ARTICLE AD BOX

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" திரைப்படம் இன்று வெளியானது. முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முதல் பாதி குறித்த நேர்மறையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் வெளியீடு தொடர்பாக நடிகர் தனுஷ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

*"அனைவருக்கும் வணக்கம்! 'ராயன்' படத்திற்கு பிறகு நான் இயக்கியுள்ள படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை எடுக்கும் போது எங்களுக்கு இருந்த மகிழ்ச்சி, அதேபோல் நீங்கள் படத்தை பார்க்கும் போது மகிழ்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தங்களது எதிர்காலத்தை நோக்கி கண்களில் கனவுடன் காத்திருக்கிறார்கள். அவர்களது கனவு நனவாக வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன், ஏனெனில் இதே இடத்தில் ஒரு காலத்தில் நானும் இருந்திருக்கிறேன். அந்த உணர்வுகளை நான் அறிவேன்.

அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! ஓம் நமச்சிவாயா! என்று தனுஷ் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

#NEEK from Tom ❤️❤️❤️ OM NAMASHIVAAYA 😇😇🙏🙏 pic.twitter.com/iv9lybpBzP

— Dhanush (@dhanushkraja) February 20, 2025
Read Entire Article