ஓபிசி பிரிவினருக்கு 42 சதவிகித இட ஒதுக்கீடு.. தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

8 hours ago
ARTICLE AD BOX

ஓபிசி பிரிவினருக்கு 42 சதவிகித இட ஒதுக்கீடு.. தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

Hyderabad
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 42 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமல்படுத்துவது தொடர்பாக அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனவும் இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

தெலுங்கனாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார். ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ரேவந்த் ரெட்டி எடுத்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கானா சட்டமன்றத்தில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 42 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியுள்ளது.

Telangana Reservation

சட்டமன்றத்தில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா விவாதத்தின் போது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவில் எதிர்க்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் சேர்ந்து இவ்விவகாரம் தொடபாக பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும். அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்த வேண்டியுள்ளது" என்றார்.

முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய, தெலுங்கானா எம்.எல்.ஏ கங்குலா கமலாகர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எப்படி தமிழகத்தில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது எனவும் பீகாரில் இந்த இட ஒதுக்கீடு கடந்த ஆண்டு முயற்சித்தும் தோல்வியில் முடிந்தது ஏன்? என்பது குறித்தும் விரிவாக பேசினார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி இண்டிஹ்ரா சவஹனே அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசிய அவர், இதன் மூலமே தமிழக அரசு வெற்றிகரமாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடிந்தாதகவும், சாதி கணக்கெடுப்பு அறிவியல் பூர்வமாகவும் விரிவாகவும் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால், தற்போது சட்டமன்றத்தில் நிறைவேறியிருக்கும் இந்த மசோதாவுக்கு பீகாரில் என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் ஏற்படும் எனவும் கூறினார். விரிவாக கணக்கெடுப்பு இரண்டு முறை நடத்தப்பட்டதன் விளைவே தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வெற்றிகரமாக அமல்படுத்த முடிந்ததாகவும்,தெலுங்கானாவில் ஏன் கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

More From
Prev
Next
English summary
The Telangana Assembly has passed a bill to provide 42 percent reservation to OBCs in local bodies. Revanth Reddy has called on all parties to meet Prime Minister Modi and urge him to amend the constitution to implement the bill.
Read Entire Article