ARTICLE AD BOX
வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களில் ஓட்டை விழுந்துவிட்டால், அந்த பாத்திரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கி போடாதீர்கள், 5 ரூபாய் பவுடர் போதும் பாத்திரத்தில் உள்ள ஓட்டையை ஈஸியாக அடைத்து பயன்படுத்தலாம். இப்படி பல கிச்சன் டிப்ஸ்களை இங்கே தெரிந்துகொள்வோம்.
வீட்டில் சமையலறையில் அன்றாட வேலைகளை எளிதாக்க இந்தியன் ரெசிபிஸ் யூடியூப் சேனலில் கூறப்பட்ட பயனுள்ள கிச்சன் டிப்ஸ்களை நாங்கள் உங்களுக்காக தொகுத்து தருகிறோம்.
பொதுவாக சமைத்த பிறகு, ஸ்டவ்வில் சமைத்த உணவுகள் தெறித்து படிந்து பிசுபிசுப்பாக இருக்கும். இவற்றை சுத்தம் செய்ய ஒரு சூப்பரான லிக்யூட் நீங்களே வீட்டில் தயார் செய்யலாம். ஒரு பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், வீட்டில் தலைக்கு பயன்படுத்தப்படும் ஷாம்பூ 3 சொட்டு எடுத்துக்கொள்ளுங்கள். பேக்கிங் சோடா 1 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது பவூலில் 1 டம்பளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி, கலந்து விடுங்கள். நன்றாகக் கலக்கிய பிறகு, அதை ஏதாவது காலியான ஸ்பிரே பாட்டலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
சமையல் முடித்த பிறகு, ஸ்டவ் மீது ஸ்பிரே செய்து துணியால் துடைத்தால் பளபளனு சுத்தமாகிவிடும். அதே போல, கிச்சனில் சுவர்களில் படிந்துள்ள எண்ணெய் பிசுபிசுப்பையும் இந்த லிக்யூட் ஸ்பிரேவை அடித்து துடைத்தால் சுத்தம் ஆகும்.
வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களில் ஓட்டை விழுந்துவிட்டால், அந்த பாத்திரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கி போடாதீர்கள், 5 ரூபாய் பவுடர் போதும் பாத்திரத்தில் உள்ள ஓட்டையை ஈஸியாக அடைத்து பயன்படுத்தலாம். பாத்திரங்களில் எப்படி ஓட்டை அடைப்பது என்று இங்கே பார்ப்போம்.
வீட்டில் பாத்திரங்கள் ஓட்டையாகிவிட்டால் அந்த பாத்திரங்களை பயன்படுத்தவே முடியாது. ஓட்டை பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணிர் கசிந்தால்கூட தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த முடியாது. அதனால், அந்த பாத்திரத்தை தூக்கிப்போட வேண்டியதாகிவிடும். ஆனால், அப்படி ஓட்டையான பாத்திரத்தை தூக்கிப்போட வேண்டாம். பாத்திரத்தில் எந்த இடத்தில் ஓட்டை இருகிறது என்று அடையாளம் காணுங்கள். ஓட்டை விழுந்த பாத்திரத்தை தண்ணீர் இல்லாமல் நன்றாக துடைத்துக்கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தை கவிழுத்து வையுங்கள். 1 பாக்கெட் ஈனோ (ENO) பவுடர் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஈனோ (ENO) பவுடர் 5 ரூபாய்தான். அதே போல, 5 ரூபாய் ஃபெவி ஸ்டிக் கம் வாங்கிக்கொள்ளுங்கள்.
இப்போது கவிழ்த்து வைக்கப்பட்ட பாத்திரத்தில் ஓட்டை எங்கே இருக்கிறதோ அங்கே சரியாக அதன் மீது, ஈனோ (ENO) பவுடர் சிறிது அளவு போடுங்கள். பிறகு, அதன் மீது ஃபெவி ஸ்டிக் 2 சொட்டு விடுங்கள். இப்போது மீண்டும் ஈனோ (ENO) பவுடர் போடுங்கள். மீண்டும் ஃபெவி ஸ்டிக் 2 சொட்டு விடுங்கள் 5 அல்லது 10 நிமிடம் காய விடுங்கள். பிறகு கழுவிவிடுங்கள். ஓட்டையான இடத்தில் மட்டும் பவுடர் கலவை பிடித்துக்கொண்டிருக்கும். இப்போது அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாருங்கள்.