“ஓடும் ரயிலில் களபேரம்”… 20 வயது பெண்ணை அவமானப்படுத்தி 40 வயது பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

4 hours ago
ARTICLE AD BOX

தலைநகர் டெல்லியில் மெட்ரோவில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பெண்ணின் உடலமைப்பை கேலி செய்யும் விதமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மெட்ரோ ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். அப்பெண் உடல் பருமனாக இருந்துள்ளார். இதனை பார்த்த ஒரு நடுத்தர வயதுக்கு உட்பட்ட 42 வயது பெண்மணி அந்த இளம் பெண்ணின் உடல் அமைப்பை பார்த்து அருகில் உள்ளவரிடம் விமர்சித்துள்ளார். இதனை மற்றொரு பயணி தலையிட்டு உடல் அமைப்பை அவமதித்து விமர்சித்து பேசுவது தவறாகும் என சுட்டிக்காட்டி உள்ளார். இதனால் ரயிலில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தில் 42 வயது பெண்மணி 20 வயது இளம்பெண்ணை “நீ 50 வயது போலவே தெரிகிறாய். உன்னை பார்த்துக்கொள். நீ உடல் கோளாறுடன் இருக்கிறாய்” என அவமதித்துள்ளார். இதற்கு பதில் அளித்த அந்த இளம்பெண் அமைதியாக “ஆம், நான் 20 வயது நான் பருமனாக இருக்கிறேன். ஆனால் நீ மிகவும் அழகாக இருக்கிறாய். நீ அருமையாகவே தெரிகிறாய் நானும் எனக்கு அழகாகவே இருக்கிறேன்”. என்று வாக்குவாதத்தை தீவிர படுத்தாமல் அமைதியாக பதிலளித்தார்.

இதனை சுற்றி இருந்த பயணிகள் கண்டும் காணாதது போல் இருந்தனர். இளம் பெண்ணிற்கு ஆதரவாக மற்றொரு பயணி “இந்தப் பெண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என கண்டிப்பாக கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.

Kalesh b/w Ladies Inside Delhi Metro over Eating Chips inside Metro and Debating over who’s more Fit
Source: Reddit pic.twitter.com/m5AQXTqs6W

— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 24, 2025

Read Entire Article